BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)
ஏகத்துவத்திற்கு பதில்
முன்னுரை: குர்ஆனில் அல்லா செய்த ஒரு சரித்திர தவறை சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தேன், அதற்கு இஸ்லாம் கல்வி தளம் இஸ்லாமிக் அவார்னஸ் என்ற தளத்தின் கட்டுரையை மறுப்பு என்றுச் சொல்லி நான் கொடுத்த தொடுப்பை மேலோட்டமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது, அதற்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் கொடுத்த மறுப்பையே நான் என் பதிலாக முன்வைத்தேன்.
படிக்கவும்:
குர்ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 : குர்ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
இஸ்லாம் கல்விக்கு பதில்: குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்
இதன் பிறகு ஏகத்துவம் தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது, அதாவது, பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்? (http://egathuvam.blogspot.com/2008/08/blog-post_15.html) என்ற கேள்வியோடு பைபிளில் முரண்பாடு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. அவர்கள் முன்வைக்கும் வாதம் இது தான், "யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு அறிவிக்கிறார், ஆனால், அந்த யோவான் ஸ்நானகன் நான் எலியா இல்லை என்றுச் சொல்கிறார், இது முரண்பாடு இல்லையா?" என்று கேட்டு இருந்தார்கள். இந்த கேள்விக்கு பதிலாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. ஆன்சரிங் இஸ்லாம் தளத்திற்கு ஒருவர் தன்னை ஒரு முன்னாள் கிறிஸ்தவர் என்றுச் சொல்லி, இந்த கேள்வியை கேட்டு இருந்தார், அவருக்கு பதிலாக ஆன்சரிங் இஸ்லாம் கொடுத்த பதிலை இங்கு தருகிறேன்.
ஆன்சரிங் இஸ்லாமுக்கு வந்த மெயில்:
தலைப்பு(Subject): விளையாட்டு முடிந்துவிட்டது கிறிஸ்தவமே!!!
ஹாய்,
நான் ஒரு முன்னாள் கிறிஸ்தவன், மற்றும் இந்த விவரங்களினால் தான் நான் கிறிஸ்தவனாக இல்லை.
மத்தேயு 17:12-13 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
யோவான் 1:19-21 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான்.
எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்று இயேசு சொன்னார், மற்றும் யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு சொன்னார்.
ஆனால், யோவான் தான் எலியா இல்லை என்றுச் சொல்லி, இயேசு சொன்னதற்கு முரண்பாடாகச் சொல்லியுள்ளார். இயேசு மற்றும் யோவான் இவர்களில் ஒருவர் உண்மையை சொல்லவில்லை. இதில் எது உண்மை என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
எங்கள் பதில்,
ஹல்லோ ----------,
உங்கள் மெயிலுக்காக நன்றி. நீங்கள் கொடுத்த தலைப்பு(Subject) மிகவும் உற்சாகத்தை கொடுக்கும் தலைப்பு என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்.
நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தவர் என்றுச் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் முதலாவது எப்படி கிறிஸ்தவராக மாறினீர்கள் என்று நான் கேட்டால், ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டீர்களே? நான் திறந்த மனதுடன் உங்கள் சாட்சியை கேட்க விரும்புகிறேன்.
உங்கள் மெயிலின் நோக்கத்தை அறிவதற்காக: நீங்கள் மிகவும் முக்கியமான முரண்பாட்டை பைபிளில் கண்டுபிடித்து விட்டதாக நினைத்துக்கொண்டு, இதன் காரணமாக எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவத்தை விட்டுவெளியேற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? உண்மையில் உங்கள் நோக்கம் அதுவல்ல என்று தெரியும்?
உங்கள் மெயிலின் நோக்கம் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும், உங்கள் தவறான புரிந்துக் கொள்ளுதல் பற்றி உங்களுக்கு தெளிவை உண்டாக்க எனக்கு அனுமதி அளியுங்கள். நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வசன மேற்கோள்கள் கீழே தரப்பட்டுள்ளது.
மத்தேயு 17:12-13 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
யோவான் 1:19-23 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
இயேசு சொன்னார் யோவான் தான் எலியா என்று, ஆனால், யோவான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் பைபிள் முரண்படுகிறது என்றுச் சொல்கிறீர்கள், அதனால், "விளையாட்டு முடிந்துவிட்டது கிறிஸ்தவமே!!!" என்று வாதம் புரிகிறீர்கள். ஆனால், இது விளக்குவதற்கு மிகவும் சுலபமான விவரம் ஆகும். அதாவது யோவான் ஸ்நானகன் தான் எலியாவா அல்லது இல்லையா? இதற்கு பதில் இல்லை... மற்றும் ஆம் என்பதாகும். அதாவது, நாம் மூன்றாவது சுவிசேஷத்தின் வசனத்தை பார்த்தோமானால், இந்த பிரச்சனை பனியாய் மாயமாய் மறைந்துவிடும்.
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும் படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் (லூக்கா 1:13-17)
மேலே உள்ள வசனங்களிலிருந்து நாம் சில விவரங்களைக் காணலாம்.
முதலாவதாக, இயேசுவின் தாய் மரியாளின் உறவினரான எலிசபெத் என்ற பெண்மணிக்கு யோவான் பிறந்தார். மறுஜென்மம் என்ற கோட்பாட்டை நீங்கள் நம்பாதவராக இருப்பீர்களானால், கண்டிப்பாக யோவான் எலியாவாக பிறந்திருக்க முடியாது (Thus, unless you believe in the concept of reincarnation, John could not have literally been Elijah). எலியா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிறந்தவர். மற்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், எப்படியென்றால் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தின் படி,அவர் அக்கினி ரதம் மூலமாக் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுபடியும் வருவார் (மல்கியா அதிகாரம் 4).
இரண்டாவதாக, தேவதூதன் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் நாம் காணலாம்: "அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - He will go on before the Lord, in the spirit and power of Elijah". எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார் என்று இயேசுவிற்குத் (யோவானுக்கு உறவினர்) தெரியும். ஆனால், யோவான் ஒரு எழுத்தின் படியாக, சரீரத்தின் படியாக எலியா இல்லை (But John was not literally Elijah). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா செய்த அந்த மகிமையான ஊழியத்திற்கு ஏற்ற ஒரு ஊழியம் மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டும் என்பதை இது குறிக்கிறது, மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்படும். யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்க் ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது. இப்போழுது உங்களுக்கு புரிந்ததா? இயேசு தன் சீடர்களிடம் எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்றுச் சொன்னது, எலியா மறுபடியும் சரீர பிரகாரமாக வந்தார் என்பதைக் குறிக்காது,அதற்கு பதிலாக எலியாவின் பலத்துடன், ஆவியுடன் ஒரு ஊழியத்தை யோவான் செய்துள்ளார் என்பதையே குறிக்கும். இதில் இன்னொரு விவரம் என்னவென்றால், எலிசெபெத்திற்கு பிறந்த யோவான் தன் உறவினன் என்று இயேசுவிற்கு அந்த நேரத்தில் தெரியும். மற்றும் பழைய ஏற்பாடு சொல்வது போல, அதன் மீது நம்பிக்கைக்கொண்டு ஒரு யூதனாக இயேசுவும், "மறுஜென்மத்தை நம்புகிறவர் அல்ல அதே நேரத்தில் அவர் அதை போதிப்பதும் இல்லை. இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். (And as a Jew who believed the Old Testament, obviously Jesus did not believe in, nor teach reincarnation. This is simple common sense).
இந்த இடத்தில் இயேசு சொல்லவந்த இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது! "எலியாப் போலத் தான் யோவான்" என்று இயேசு குறிப்பிடும் போது, அவர் யோவான் யார் என்பதை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை, அதோகூட, தான் (இயேசு) யார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக சொல்லியுள்ளார் (When Jesus referred to John as Elijah, He was not simply making a point about who John was, but rather Jesus was pointing to who HE was!)
எலியாவைப் பற்றியுள்ள தீர்க்கதரிசன வசனம் பற்றி தெரிந்தவர்களுக்கு சரியாக புரியும், அதாவது, இயேசு மிகவும் தெளிவாகச் சொல்கிறார், "தானே யேகோவா, வல்லமையுள்ள தேவன் - Yahweh - God Almighty" என்று. நாம் இந்த தீர்கக்தரிசனத்தை கவனிக்கும் போது, இந்த விவரம் மிகவும் தெளிவாக புரியும்.
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்…..இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்….ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்….அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்;…நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து,…(மல்கியா 3:1, 4:5-6, 3:2, 3:3, 3:5)
ஆக, எலியா "கர்த்தரின் நாளுக்கு-யேகோவாவின் நாளுக்கு(the Day of the LORD - The Day of Yahweh)" முன்பாக வரவேண்டும். மற்றும் இந்த நாளில், தேவான் தாமே தன் தேவாலயத்திற்கு வருவார். இது யாருடைய தேவாலயம் என்று இவ்வசனம் சொல்கிறது? அது தேவனின் தேவாலயம். இயேசு தன் முதல் வருகையில் அந்த தேவாலயத்திற்குச் சென்று, அதை சுத்தம் செய்தார். அவர் இரண்டாம் முறை வரும்போது, மறுபடியும் அப்படியேச் செய்வார், ஆனால், மிகவும் முழுமையான விதத்தில் செய்வார். இந்த இரண்டாம் முறை, அவர் தேவன் தானா என்று யாரும் சந்தேகம் கொள்ள முடியாது, மற்றும் அவர் மக்களை நியாயம் தீர்ப்பார்.
இதே போல யோவான் ஸ்நானகனும் மேலே சொன்ன விவரத்தை உறுதிப்படுத்தினார். யோவானிடம் "நீ யார் ?" என்ற கேள்வி கேட்கப்பட்டப்போது, ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை பயன்படுத்தி யோவான் பதில் அளிக்கிறார், "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்". கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,… சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு (ஏசாயா 40:3, 9)
மறுபடியும் ஒரு முறை தெளிவாக விவரிக்குகிறேன், மேலே உள்ள வசனங்கள் சொல்கின்றன, "பாதைகளை செவ்வைப்படுத்துங்கள், தயார்படுத்துங்கள்" என்று "ஒரு மனிதனை தயார்படுத்துங்கள்" என்று அல்ல. மற்றும் இந்த பாதை யாருக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும், தேவனுக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும்.
இப்போது சில கேள்விகள் கேட்கவேண்டும் ..... அவர்களே, நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனுக்கு எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள்? நீங்கள் சர்வ வல்லவருக்கும் அவரது சத்தியத்திற்கும் உங்களை சமர்பித்துக் கொண்டீர்களா? அல்லது உங்களை நியாயம் தீர்க்க வருகிறவரான தேவனையும் அவரது போதனையையும் தள்ளிவிடப் போகிறீர்களா?
நீங்கள் இந்த விவரங்களை அப்படியே ஒதுக்கிவிடப் போகிறீர்களா? அல்லது நீங்கள் உண்மையான தேவனிடம் வேண்டிக் கொள்ளப் போகிறீர்களா? அவரை தேடப்போகிறீர்களா? நான் உங்களை உட்சாகப்படுத்துகிறேன், அதாவது என் மூலமாக தேவன் உங்களை உட்சாகப்படுத்துவதாக நினைத்து, தேவனோடு, உண்மையான இறைவனோடு ஒப்புறவாகுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இப்படிக்கு,
லாசரஸ்
லாசரஸ்
No comments:
Post a Comment