அகமதாபாத் குண்டுவெடிப்பு: 7 பேரின் படங்கள் மூலம் விசாரணை | ||
| ||
அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, 7 பேரின் படங்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 26ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 45க்கும் அதிகமானோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சூரத் நகரில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேரின் படங்களை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதவிர, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரின் படங்களையும் பெற்றுள்ள போலீசார், அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "தேவைப்பட்டால், இந்த 7 பேரின் புகைப்படங்களையும் சாட்சிகளிடம் காட்டி, விசாரணை நடத்துவோம்" என போலீசார் தெரிவித்துள்ளனர். | ||
(மூலம் - வெப்துனியா) | ||
Tuesday, August 5, 2008
அகமதாபாத் குண்டுவெடிப்பு: 7 பேரின் படங்கள் மூலம் விசாரணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment