Thursday, August 7, 2008

பவுன் ரூ.8,944 ஆக குறைந்தது: தங்கம் விலை வீழ்ச்சியால் பெண்கள் மகிழ்ச்சி; நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது

பவுன் ரூ.8,944 ஆக குறைந்தது: தங்கம் விலை வீழ்ச்சியால் பெண்கள் மகிழ்ச்சி; நகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது

சென்னை, ஆக. 7-

கடந்த மாதம் 16-ந்தேதி விலை உச்சத்துக்கு சென்று ஒரு பவுன் தங்கம் ரூ. 10 ஆயிரத்து 48-க்கு விற்றது. தற்போது ஒரு வாரமாக தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரு பவுனுக்கு ரூ. 208 குறைந்து விலை ரூ. 8920 ஆக இருந்தது.

இன்று தங்கம் விலை பவுன் ரூ.8944 ஆகவும், ஒரு கிராம் ரூ.1118 ஆகவும் உள்ளது.

விலை குறைந்து இருப்பதால் பெண்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. தி.நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

ஆவணி மாதம் அதிக அளவில் திருமணம் நடக்கும். ஏராளமான திருவிழாக்களும் நடப்பது உண்டு. எனவே நகை தேவைபடுபவர்கள் இப்போது விலை குறைந்து இருப்பதால் ஆர்வத்துடன் நகை வாங்கி செல்கிறார்கள்.

தங்கத்தில் பணத்தை முதலீடு செய்கிறவர்களும் அதிக அளவில் வாங்குகிறார்கள்.

தங்கம் விலை குறைந்து இருப்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த மாதம் ஆவணியில் நிறைய திருமணங் கள் நடைபெறும். தற்போது தங்கம் விலை குறைந்திருப் பதால் திருமணத்துக்கு நகை வாங்க இதுதான் சரியான நேரம் என பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

புரசைவாக்கம் குழந்தை வேல் தெருவைச் சேர்ந்த லட்சுமி என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு நகை வாங்க தி.நகர் வந்திருந்தார்.

அவர் கூறியதாவது:-

நான் நகை வாங்க தி.நகருக்குத்தான் வருவேன். இங்குதான் நகை டிசைன், தரம் நன்றாக இருக்கும். தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றதால் நகை வாங்க தயக்கம் ஏற்பட்டது. எப்போது குறையும் என்று காத்திருந்தேன்.

இப்போது விலை குறைந்திருப்பதால் இதுதான் சரியான நேரம் என்று வந்திருக்கிறேன். ஆடி மாதம் என்றாலும் நகை வாங்குவது லாபம் என்பதால் எனக்கு பிடித்தமான நகைகளை வாங்கிச் செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

அண்ணாசாலையைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூறியதாவது:-

நான் திருப்பூரில் இருந்து மகளைப் பார்க்க சென்னை வந்தேன். இங்கு நகை விலை குறைந்திருப்பதாக கூறியதை யடுத்து நகை வாங்க வந்தேன். இன்னும் விலை குறைந்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

விலை உயர்வினால் தங்கம் வாங்க முடியுமா என்று பெண்கள் மத்தியில் நிலவிய அச்சம் தற்போது லேசாக விலகியது. இன்னும் குறைந்தால் பெண்கள் நகை வாங்க அதிக ஆர்வம் காட்டு வார்கள் என்றார்.

பம்மலைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரி தலவேந்திரன் மனைவியுடன் நகை வாங்க வந்தார். அவர் கூறுகையில், தங்கம் விலை குறைந்தது வரவேற்கத்தக்கது. மேலும் குறைந்தால் பெண்கள் இன்னும் மகிழ்ச்சி அடை வார்கள் என்றார்.

ஜெயச்சந்திரன் ஜ×வல்லர்ஸ் உரிமையாளர் சுந்தர் கூறியதாவது:-

தங்கம் விலை குறைந்து இருப்பதால் நகை வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலையும் குறைந்துள்ளதால் தங்கத் தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இது திருமண சீசன் இல்லை. அடுத்த மாதம்தான் திருமண முகூர்த்தங்கள் வருகிறது. 3 மாதமாக இல்லாத அளவுக்கு இப்போது விலை குறைந்து இருப்பதால் பெண்கள் நகை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய மார்க்கெட் பவுன் ரூ.8944 ஆக இருந்தாலும் எங்கள் கடையில் கிராமுக்கு ரூ.60 குறைத்து ரூ.8464-க்கு விற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

லண்டன் தங்கம் மார்க் கெட்டில் முதலீடு செய் பவர்கள் திரும்ப பெறு வதாலும் கச்சா எண்ணை விலை குறைவு, அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றால்தான் தங்கம் விலை குறைந்து வருவ தாக வியாபாரிகள் தெரி வித்தனர்.

இதுபற்றி தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்க தலைமை ஆலோசகர் செய்யது அகமது கூறும்போது தங்கம் விலை வீழ்ச்சி தற்காலிகமானதுதான். விரைவில் விலை உயரலாம். அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் ஏதாவது பிரச்சினை ஏற்படுத்தினால் உடனே விலை உயர்ந்து விடும். எனவே தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம்'' என்றார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails