ஹாட்ரிக் அடித்தார் பெல்ப்ஸ் | |
. | |
| |
. | |
பெய்ஜிங், ஆக. 12: அமெரிக்க நீச்சல் வீரர் இன்று 3வது உலக சாதனையோடு 3வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் 9 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள வரலாற்று நாயகர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்துள்ளார். | |
. | |
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். 400 மீட்டர் மெட்லி மற்றும் 400 மீட்டர் பிரி ஸ்டைல் ரிலே போட்டிகளில் அவர் முதல் 2 தங்கப்பதக்கங்களை உலக சாதனையோடு வென்றுள்ளார். இந்நிலையில் இன்று அவர் தனது 3வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 200 மீட்டர் பிரி ஸ்டைல் போட்டியில் அவர் 1 நிமிடம் 42.96 வினாடிகளை கடந்து புதிய உலக சாதனை படைத்து தங்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே கடந்த ஒலிம்பிக்கில் 6 தங்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ் மொத்தம் 9 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 9 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள சாதனையாளர்களான மார்க் ஸ்பிட்ஸ், காரல் லூயிஸ், பாவோ நுர்மி மற்றும் லார்சியா லாட்நினா ஆகியோர் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார். நாளை பெல்ப்ஸ் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டியில் பங்கேற்கிறார். இதில் வெற்றி பெற்றால் அவர் 10வது தங்கப்பதக்கத்தை வென்று புதிய வரலாறு படைப்பார். இந்த பிரிவில் அவர் உலக சாதனைக்கு சொந்தக்காரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. |
Tuesday, August 12, 2008
ஹாட்ரிக் அடித்தார் பெல்ப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment