இந்தியாவின் ஒலிம்பிக் 'தங்க' மகன் அபினவ் பிந்த்ரா! | ||||
| ||||
இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய அபினவ், மொத்தம் (596+104.5) 700.5 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார். இதுவே, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் ஆகும். மேலும், இதுவரை பெற்றுள்ள தங்கப் பதங்கங்களில், இது 9-வது தங்கமாகும். முன்னதாக, கடந்த 2004-ல் ஏதென்ஸ்சில் நடந்த ஒலிம்பிக்கில், டபுள் டிராப் ஷூட்டர் ராஜ்யவர்தன் ரதோர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. பீஜிங் ஒலிம்பிக்கில் தற்போது வரலாறு படைத்துள்ள அனுபவ் பிந்த்ரே, கடந்து வந்த பாதை வியப்புக்குரியதும் சாதனைகள் நிரம்பியதுமாகும். அனுபவ் பிந்த்ரா பஞ்சாபில் வசித்து வரும் இவர், 1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ல் பிறந்தார். கோலராடோ பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பும், முனீச்சில் டிப்ளமோ இன் ஸ்போர்ட்ஸ் மென்டல் மேனேஜ்மென்ட்டும் பயின்றவர். இளம் வயதில் இருந்தே, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று, எண்ணற்ற பரிசுகளையும் விருதுகளையும் குவித்தவர். சாதனைகள் * 2006- மெல்போர்ன் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள். * 2005 - பேங்காக்கில் நடந்த ஆசிய துப்பாக்கிச் சுடுதல் கோப்பையில் தங்கம். * 2004- ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் சாதனை முறையடிப்பு; இறுதிச் சுற்றுக்குத் தகுதி * 2004 - ஆல் அமெரிக்கன் கோப்பையில் தங்கப் பதக்கம் * 2002 - மான்செஸ்டர், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள். * 2002 - ஐரோப்பிய சர்க்யூட் கோப்பை - 7 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம். * 1999 - 2000, 2001, 2002, 2003, 2005 - தேசிய சாம்பியன் பட்டங்கள் * ஜூனியர் பிரிவு போட்டிகளில் பல தங்கப் பதங்கங்களும், உலக சாதனைகளும். முக்கிய விருதுகள் * அர்ஜூனா விருது - 2000 * ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது - 2001 * மகாராஜா ரஞ்சித் சிங் விருது - 2001 * கே.கே.பிர்லா விருது - 2002 * பஞ்சாப் பிராமன் பாத்ரா விருது - 2006 | ||||
(மூலம் - வெப்துனியா) |
Tuesday, August 12, 2008
இந்தியாவின் ஒலிம்பிக் 'தங்க' மகன் அபினவ் பிந்த்ரா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment