Wednesday, August 6, 2008

ஒலிம்பிக்: ஊக்கமருந்து சோதனையில் மோனிகா தேவி தோல்வி

ஒலிம்பிக்: ஊக்கமருந்து சோதனையில் மோனிகா தேவி தோல்வி
ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றதால், ஒலிம்பிக் செல்லும் இந்திய அணியில் இருந்து பளுதூக்கும் வீராங்கனை மோனிகா தேவி நீக்கப்பட்டார்.

ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் முடிவு வெளியிடப்பட்டது.

அதில், மோனிகா பேடி தடைசெய்யப்பட்ட மருந்தினைப் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பீஜிங் செல்லும் இந்திய அணியில் இருந்து 69 கிலோ எடை பிரிவின் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த மோனிகா தேவி நீக்கப்பட்டுள்ளார்.

இதனால், மோனிகாவுக்கு பதிலாக ஷைலஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வு செய்வதற்கு, இந்திய பளுதூக்கும் விளையாட்டுக்கான கூட்டமைப்பு நடத்திய பயிற்சிகளின்போது, மனிப்பூரைச் சேர்ந்த மோனிகா தேவியைக் காட்டிலும், ஆந்திராவைச் சேர்ந்த பி.ஷைலஜாவே சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தினார்.

எனினும், இறுதியில் மோனிகா தேவியை ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார்.

முன்னதாக, ஏப்ரலில் ஜப்பானில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளில் மோனிகா சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails