Thursday, August 7, 2008

குண்டு வைக்க சதி திட்டம்: தவ்பீக்கை நாங்களே அடித்து கொல்வோம்; அண்ணன் ஆவேசம்

குண்டு வைக்க சதி திட்டம்: தவ்பீக்கை நாங்களே அடித்து கொல்வோம்; அண்ணன் ஆவேசம்

சென்னை, ஆக.7-

தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு சதி திட்டம் தீட்டிய தாக 3 தீவிரவாதிகள் பிடிபட்டு உள்ளனர். அவர் களிடம் நெல்லையில் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடந்து வரு கிறது.

சதி திட்டத்துக்கு மூளை யாக இருந்து செயல் பட்ட தவ்பீக் என்ற தீவிரவாதி தப்பி ஓடிவிட்டான். அவன் கேரளாவில் தலைமறை வாக இருப்பதாக வந்த தகவலையடுத்து தமிழக சிறப்பு போலீஸ் படை கேரளாவில் அவனை தேடி வருகிறது.

தீவிரவாதி தவ்பீக்கின் சொந்த ஊர் தஞ்சை மாவட் டம் அதிராம்பட்டினம். இங்கு சாதாரண குடும்பத்தில் பிறந்தான். 10- ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான். அதிராம் பட்டினம் மற்றும் அரியலூரில் நடந்த 2 கொலைகள் தொடர்பாக தவ்பீக் மீது வழக்கு உள்ளது.

இந்த வழக்கில் போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண் டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடுதலை யானான். இதற்காக மண்ணடியில் தங்கியிருந்த போதுதான் "இறைவன் ஒருவனே'' என்ற அமைப்பை தொடங்கினான்.

கடந்த சட்டசபை தேர்த லில் பட்டுக்கோட்டை தொகுதி யில் போட்டியிட்டு தோல்வி அடைந்தான். 5 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன.

உள்ளூர் பிரமுகர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் மண்ணடிக்கு வந்து விட்டான். இங்கு குண்டு வைப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தேடி வருகிறார்கள்.

தவ்பீக்குக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அதிராம் பட்டினத்தில் வசிக்கிறார்கள். 3 சகோதரர்கள், 4 சகோதரிகள் உள்ளனர்.

தவ்பீக்கின் அண்ணன் சாதிக் அதிராம்பட்டினத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் தனது தம்பி பற்றி கூறியதா வது:-

3 மாதத்துக்கு முன்புதான் தவ்பீக்கை பார்த்தேன். அப்போது அவன் தன்னை போலீசார் உளவு சொல்ல பயன்படுத்துவதற்கு தேடுவ தாக கூறினான். அதன்பிறகு அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

இப்போது அவன் தமிழ் நாட்டில் வெடிகுண்டு வைக்க சதிதிட்டம் திட்டியதாக சொல்வது உண்மையாக இருந்தால் நாங்களே அவனை அடித்துக் கொல்வோம்.

சிறுவயதில் அவன் கம்ïனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். அப்போது அவன் எலியைக் கூட கொல்ல நினைக்க மாட் டான்.

தவ்பீக் தொடங்கிய "இறைவன் ஒருவனே'' அமைப்பு மீது இஸ்லாமிய அமைப்பு களுக்கு உடன்பாடு இல்லை. அவன் மீது அதிருப்தி அடைந்தனர்.

போலீஸ் தேடுவதால் தவ்பீக்கின் மனைவி, குழந்தை கள் தவிக்கிறார்கள். தவ்பீக் கின் மனைவி தினமும் என்னிடம் வந்து தவ்பீக் எங்கே என்று பலமுறை கேட்டவாறு இருக்கிறார். ஆனால் தவ்பீக் இதுவரை எங்களிடம் தொடர்பு கொள்ள இல்லை.

இவ்வாறு சாதிக் கூறினார்.

தவ்பீக்கின் தந்தை சாகுல் அமீது உடல்நலம் குன்றிய நிலையில் சாதிக்குடன் வசிக்கிறார்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails