Thursday, August 21, 2008

சவூதிக்கு முஷாரப் ஓட்டம்?

சவூதிக்கு முஷாரப் ஓட்டம்?
.
.
இஸ்லாமாபாத், ஆக.18: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து விலகி சவூதி அரேபியாவில் தஞ்ச மடைய முஷாரப் முடிவு செய்துள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
.
முஷாரப்புக்கு புகலிடம் அளிக்க அமெரிக்கா மறுத்து விட்டதை தொடர்ந்து அவர் சவூதி செல்ல ராவல்பிண்டியில் விமானம் ஒன்று தயாராக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதாக தெரிகிறது.

இன்று பிற்பகல் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் முஷாரப் அதிபர் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபராக உள்ள முன்னாள் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்புக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முஷாரப் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்; அல்லது அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  இன்று காலை முஷாரப் தனது அரசியல் ஆலோசகர்கள் மற்றும் சட்ட நிபுணர் களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து முஷாரப் இன்று மதியம் 1 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்று கிறார். அப்போது அவர் தான் பதவி விலகுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

ஆனால் முஷாரப் பதவி விலக மாட்டார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே முஷாரப்புக்கு புகலிடம் அளிக்க அமெரிக்கா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முஷாரப் சவூதி அரேபியா சென்று தஞ்சமடைவார் என்று கூறப்படுகிறது.

ராவல்பிண்டி விமான நிலையத்தில் சவூதி நாட்டின் விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. முஷாரப் பதவி விலகியவுடன் அந்த விமானத்தில் அவர் சவூதி புறப்பட்டுச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

 

http://www.maalaisudar.com/newsindex.php?id=18056%20&%20section=1

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails