குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல் | |
| |
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 'சிமி' தீவிரவாதிகள் 10 பேரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்தடுத்து பல இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 55 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், உத்தரபிரதேசத்தில் பதுங்கியிருந்த அபு பஷீர் என்பவனை போலீசார் பிடித்தனர். குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட இவனிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த மேலும் 9 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், 10 பேரையும் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். | |
(மூலம் - வெப்துனியா) |
Tuesday, August 19, 2008
குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment