மீண்டும் இந்தியா திரும்பினார் தஸ்லிமா | |
| |
பிரபல சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இன்று மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில், உடனடியாக ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். தனது சர்ச்சைக்குரிய 'லஜ்ஜா' புத்தகம் மூலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு உள்ளான தஸ்லிமா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். மேற்குவங்கத்தில் தங்கியிருந்த தஸ்லிமாவுக்கு அங்கும் மிரட்டல் வந்ததையடுத்து, அவர் டெல்லியில் மத்திய பாதுகாப்பு ஏஜென்சியினரால் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டார். ஆனால் தாம் சிறையிலடைக்கப்பட்டிருப்பது போன்று உணர்வதால், தம்மை வெளியே நடமாட அனுமதிக்க வேண்டும் என தஸ்லிமா மத்திய அரசைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு, ரகசியமாக தங்கியிருக்க விருப்பமில்லையென்றால் நாட்டைவிட்டு வெளியேறலாம் எனக் கூறியது. இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஸ்வீடனில் தஞ்சம் புகுந்தார் தஸ்லிமா. இந்நிலையில், அவர் இன்று மீண்டும் இந்தியா திரும்பினார்.டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய தஸ்லிமாவை, அங்கு தயாராக இருந்த மத்திய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள், உடனடியாக அங்கிருந்து ரகசிய அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர். தஸ்லிமாவின் விசா இம்மாதம் 12 ம் தேதியுடன் முடிவடைகிற நிலையில், அவர் தனக்கு நிரந்தர இந்திய குடியுரிமை அளிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஆனால் அது குறித்து அரசு இன்னும் முடிவேதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. | |
(மூலம் - வெப்துனியா) |
Friday, August 8, 2008
மீண்டும் இந்தியா திரும்பினார் தஸ்லிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment