Thursday, August 21, 2008

தங்கம் வெல்வேன்: விஜேந்தர்

தங்கம் வெல்வேன்: விஜேந்தர்
.
.
 பெய்ஜிங், ஆக.21: நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்வேன் என்று குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்திய வீரர் விஜேந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் நேற்று நடைபெற்ற மோதலில் இக்விடார் நாட்டை சேர்ந்த கார்லோஸ் கோங்கோரோவை 75 கிலோ எடை பிரிவில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து அவர் குறைந்தது வெண்கல பதக்கத்தை வெல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் விஜேந்தர் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். உலகின் மற்ற குத்துச் சண்டை வீரர்கள் சண்டையிடுவதை வீடியோவில் பார்த்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு தூரம் வந்து விட்டு தங்கப் பதக்கத்தை வெல்லாமல் விட மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதியில் மிகுந்த உத்வேகத்தோடு தான் சண்டையிட்டதாகவும், அகில் குமார் மற்றும் ஜிதேந்தர் தோல்வி அடைந்த பிறகு ஏதாவது செய்ய வேண்டும் எனும் மனஉறுதியோடு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரையிறுதியில் அவர் கியூபா வீரர் எமிலியோ கோரியாவோடு மோதுகிறார். நாளை அரையிறுதி மோதல் நடைபெறுகிறது.

இந்த மோதலில் அவர் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் தோல்வி அடைந்தார். அவர் ரஷ்யாவின் பால்ஷின்னிடம் போராடி தோற்றுப் போனார்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails