Sunday, September 28, 2008

நாச்சிக்குடாவுக்குள் நுழைந்துவிட்டோம்: படைத்தரப்பு அறிவிப்பு

 
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் வீதியிலுள்ள நாச்சிக்குடாப் பகுதியில் நேற்று மாலை இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றதாகக் களமுனைத் தகவல்கள் தெரிவித்தன.
நேற்றைய மோதலின்போது நாச்சிக்குடாவின் எல்லைப் பகுதியிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரம் வரை இராணுவத்தினர் முன்னேறியிருக்கின்றனர் என நேற்று மாலை படைத்தரப்பு அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த மோதலில் 10 விடுதலைப் புலி உறுப்பினர்களும் இரு படைச்சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர். 8 படையினர் காயமடைந்தனர் என்றும் படைத்தரப்பு தெரிவித்திருக்கிறது. 58ஆவது படைப்பிரிவினரே இந்த மோதலில் ஈடுபட்டனர் எனவும் கூறப்பட்டது.
இதேவேளை, நேற்றைய மோதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails