Thursday, September 25, 2008

ஒரிசாவில் வன்முறை கிறிஸ்தவ ஆலயம் மீது மீண்டும் தாக்குதல்

வனேசுவரம், செப்25-

ஒரிசாவில் இந்து சாமியார் நக்சலைட்டுகளால் கொல் லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் வெடித்தது.கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன.கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர். கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் 15-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதுவரை 145 கிறஸ்தவ ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு கூடங்கள் தாக்கப்பட்டு உள்ளன.

கலவரத்தை அடக்க மத்திய போலீஸ் படை குவிக்கபட்டு உள்ளது. இருந்தாலும் அங்கு நிலைமை சீராகவில்லை.ஒரு மாதத்துக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.

நேற்று ராய்கியா என்ற இடத்தில் போலீஸ் நிலையம் மீது வன்முறை கும்பல் தாக்கியது. அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இதில் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.போலீஸ் தரப்பில் 25 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. ஆலயத் துக்குள் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. நிலைமை மோச மாகாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails