| | தில்லியில் கரோல்பாக், கனாட் பிளேஸ் மற்றும் கிரேட்டர் கைலாஷ் ஆகிய பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில், 18 பேர் உயிரிழந்தனர். 90 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை சுமார் 6.15 மணியளவில் மக்கள் நெரிசல் மிகுந்த கரோல்பாக் சந்தைப் பகுதியில் முதல் குண்டு வெடித்தது. அது கேஸ் சிலிண்டர் வெடிப்பு என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், சில நிமிடங்களிலேயே தில்லியின் மற்றொரு முக்கியப் பகுதியான கனாட் பிளேஸில் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. தெற்கு தில்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியிலும் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் காயமடைந்துள்ளனர். 45 நிமிடங்களுக்குள் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளால் தில்லிவாழ் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்வதற்கு சற்றுமுன் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பு ஏற்பதாக சில பத்திரிகை அலுவலகங்களுக்கு சிமி தீவிரவாத இயக்கத்தின் ஒரு பிரிவான 'இந்திய முஜாஹிதீன்' மின்அஞ்சல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதே அமைப்பு தான் ஆமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கும் பொறுப்பு ஏற்பதாக கூறியிருந்தது. சிமி இயக்கத்தைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், தில்லி மற்றும் சென்னையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா கேட் பகுதியில், வெடிக்காத குண்டு ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டது. மேலும், கனாட் பிளேஸ் பகுதியில் இரு குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், இச்சம்பவத்தின் சாட்சி எனக் கருதப்படும் 12 வயது சிறுவனை போலீஸ�ர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தில்லி தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
| |
No comments:
Post a Comment