தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளது. முதலில் கரோல் பாக்கில் உள்ள கஃபார் சந்தைப் பகுதியில் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 20 பேர் காயமுற்றனர். அதனைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஸ் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. கன்னாட் பிளேஸ் குண்டு வெடிப்பில் 12 பேர் காயமுற்றதாக செய்திகள் கூறுகின்றன. இந்த குண்டு வெடிப்புக்களில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அனைவரும் இராம் மனோகர் லோகியா உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். | |
No comments:
Post a Comment