Thursday, September 18, 2008

இந்திய சுற்றுப்பயணத்தின்போது மனைவி, காதலியை அழைத்து செல்ல ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு தடை

 
lankasri.comரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருகிற 21-ந்தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 9-ந்தேதி பெங்களூரில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பயணத்தின் போது மனைவி மற்றும் காதலிகளை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பாதுகாப்பு பிரச்சினை காரணம் கிடையாது. ஆஸ்திரேலியாவின் கொள்கை முடிவாகும்.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மீடியா மானேஜர் பிலிப் போப் கூறியதாவது:-

வீரர்கள் தங்கள் மனைவியையோ அல்லது காதலியையோ அழைத்து செல்ல நாங்கள் குறிப்பிட்ட காலம் வைத்திருக்கிறோம். அந்த சமயத்தில் தான் வீரர்கள் தங்களின் துணைவியை அழைத்து செல்லமுடியும்.

வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே (மெல்போர்ன்) டெஸ்ட் மற்றும் சிட்னி டெஸ்ட் நடைபெறும். எனவே இந்த பண்டிகை காலத்தில் வீரர்கள் தங்களது குடும்பத்திருடன் நேரத்தை செலவிட்டு கொள்வார்கள்.

இது தவிர ஆண்டுக்கு ஒரே ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு மட்டும் தங்கள் துணையை அழைத்து செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு (2007-ம் ஆண்டு) வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலிகளை கூட்டிச் சென்றிருந்தார்கள்.

அடுத்து இந்த சீசனில் (2008-09) நீண்ட கால சுற்றுப்பயணமான தென்ஆப்பிரிக்க தொடரின் போது மனைவி மற்றும் பெண் தோழிகளை அழைத்து செல்ல வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்திய சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுடன் அவர்களை அழைத்துச் செல்ல எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 65 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியாவில் இது போன்ற பாலிசி கிடையாது. ஷேவாக் உள்பட சில இந்திய வீரர்கள் அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் தங்களது மனைவியை அழைத்து சென்று வருகின்றனர்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1221632124&archive=&start_from=&ucat=4&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails