கர்நாடகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிரடி நடவடிக்கை
வெளிநாட்டு மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்
முதல்-மந்திரி எடிïரப்பா அறிவிப்பு
மங்களூர், செப்.29-
கர்நாடகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, வெளிநாட்டு மாணவர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடிïரப்பா கூறினார்.
முதல்-மந்திரி எடிïரப்பா நேற்று காலை 9 மணிக்கு விமானம் மூலம் மங்களூர் வந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மங்களூர் டவுன்ஹால் சென்றார். அங்கு நடந்த பிரம்மஸ்ரீ நாராயணகுரு சாமியாரின் பிறந்தநாள் விழாவில் அவர் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும் நிருபர்களுக்கு எடிïரப்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாது:-
உதவவில்லை
கர்நாடகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறதோ என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. தீவிரவாதிகளை ஒடுக்க மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது எந்த பலனையும் அளிக்கவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. வெறும் வாய்ப்பேச்சோடு சரி. கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டு விட்டது. மத்திய அரசின் மெத்தன போக்கு காரணமாக தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தற்போது எல்லைமீறி விட்டன. எனவே, இனியும் மத்திய அரசு கை கட்டி நிற்காமல் இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலாக்காதீர்
கர்நாடகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. இதற்கு அரசியல் சாயம் பூச யாரும் நினைக்க கூடாது.
மேலும் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கவும், தசரா, ரம்ஜான் போன்ற பண்டிகை கொண்டாட்டங்களின் போது தீவிரமாக கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள்
கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொல்வது போல சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்கேடு அடைந்து விடவில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மத்திய அரசின் உதவி இல்லாமலேயே கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் பாதுகாக்கப்படும். கர்நாடகத்தில் இருந்து வெடிகுண்டு போன்ற பொருட்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படுவதாக வரும் செய்திகள் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதனைத் தடுக்க கர்நாடகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக கர்நாடகத்தில் பாகிஸ்தான், வங்காள தேசத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக கண்காணிக்கப்படும். கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகள் திறமையுடன் செயல்படுகிறார்கள். அவர்களின் பணிகள் பற்றி குறை சொல்ல முடியாது.
இவ்வாறு எடிïரப்பா கூறினார்.
தேவையில்லை
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த எடிïரப்பா, ``கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டை தேவையான அளவுக்கு போலீஸ் படை இருக்கிறது. எனவே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை வரவழைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை'' என்றார்.
``கர்நாடக மாநிலம் சுள்ளியா தாலுகா வில் உள்ள மண்டேகோலு அருகே சில ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கூறப்படுகிறதே?'' என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு எடிïரப்பா, ``கர்நாடகத்தின் வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என்று பதில் அளித்தார்.
பேட்டியின்போது உடன் இருந்த மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த கவுடா கூறியதாவது:-
அசைக்க முடியாது
காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் ஒன்று சேர்ந்தால் கூட பா.ஜனதாவை அசைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேஷ்பாண்டே, முதலில் அவருடைய கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதற்கு முன் பா.ஜனதா பற்றி பேசக் கூடாது. பா.ஜனதாவை விமர்சிக்கும் தகுதி தேஷ்பாண்டேக்கு கிடையாது.
இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
அதன்பிறகு நகர வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுடன் எடிïரப்பா ஆலோசனை நடத்தினார். பின்னர் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தேரடி வீதியில் உள்ள வெங்கடரமணசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் எடிïரப்பா சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டார். எடிïரப்பா வருகையை முன்னிட்டு மங்களூரில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
No comments:
Post a Comment