Thursday, September 18, 2008

உங்களுக்கு இதயம் இருக்கிறதா?

உன்னையே நீ அறிவாய்...

உங்களுக்கு இதயம் இருக்கிறதா? - கவிஞர் செவ்வியன்

 

நீங்கள் தவறு செய்யும் போதும், பிறர்க்குத் தீங்கிழைக்கும் போதும், ஒப்புரவாளர்கள் உங்களைப் பார்த்துத் தொடுக்கும் வினா உங்களுக்கு இதயம் இருக்கிறதா, என்பதாகும்.

என் நிறம் கருஞ்சிவப்பு; கூம்பு வடிவம்; கவிழ்ந்த தாமரை மொட்டு போல் இருப்பேன். என் பெயர் தான் இதயம். கரு உருவாகி 21ஆம் நாள் என் பணியைத் தொடங்கும் நான், உங்கள் உயிர் உங்கள் உடலை விட்டுப் பிரியும் வரை, என் பணியை நிறுத்துவதே இல்லை. நீங்கள் தூங்கும்போதுகூட, அல்லும் பகலும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஓயாத உழைப்பாளி நான்.

உங்களின் மார்பில் நடுநாயகமாக அமர்ந்திருக்கும் என்னை எலும்புகள் புடை சூழ்ந்தவாறு எனக்குப் பாதுகாப்பளிக்கின்றன. உங்கள் இடது விலாப்பக்கம் கைகளை வைத்துப் பார்த்தால், நான் துடிப்பதை நீங்கள் உணர்வீர்கள். 350 கிராம் எடையுள்ள நான் 15 செ. மீட்டர் நீளமும் 10 செ.மீட்டர் அகலமும், உங்கள் எடையில் 1/200 பங்கும் இருப்பேன்.

காதல் தூதுவன், கற்பனைச் சிறகடிப்பது, பாசம் பொழிவது, அன்பு காட்டுவது, பிறர்மீது இரக்கங்கொள்வது ஆகியவைகள் என் கடமை கள் அல்ல. இவை மூளையின் செயற்பாடுகள். உடல் முழுவதும் இரத்தம் செல்வதற்காக, இரத்தத்தை வேகமாகக் குழாய்களில் இறைப் பதே என் பணி.

ஒரு நாளைக்கு நான் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா? 90,000 கி.மீட்டர் (பூமியின் வட தென் துருவச் சுற்றளவு 40,000 கி.மீட்டர் மட்டுமே). பூமியை இரண்டேகால் முறை சுற்றி வருவதற்கு என் பயணம் சமமாகும். உங்கள் உயரம் வேறுபடலாம். ஆனால் உங்கள் உடலுக்குள் உள்ள இரத்தத் தின் அளவு அய்ந்தரை லிட்டர்தான். என் அறைகளுக்குள் ஒரு நாள் வந்து செல்லும் இரத்தத்தின் அளவு 15,000 லிட்டர்.

ஒவ்வொரு கீழறையும் ஒரு துடிப்பின்போது அய்ந்தரை கன அங்குல இரத்தத்தை வெளி யேற்றுகின்றது. நான் ஒரு நிமிடத்துக்குள் 72 முறை துடிக்கிறேன். உடம்பிலுள்ள அய்ந்தரை லிட்டர் இரத்தம் அனைத்து இரத்தக் குழாய் களிலும் ஓடி மீண்டும் என்னை வந்தடைய ஆகும் நேரம் ஒரு நிமிடம் ஆகும்.

நான் மென்மையானவன் அல்லன். ஒரு நாளில் 120 டன் எடையை 1 அடி உயர்த்த ஆகும் சக்திக்கான வேலையை நான் செய்கிறேன்.

உங்கள் வாழ்நாளில் 3,00,000 டன் எடை யுள்ள இரத்தத்தை இரத்தக் குழாய்களின் மூலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

என்னால் இறைக்கப்படும் இரத்தத்தின் அழுத்தம் 1120/80 mmHg ஆகும் 120 என்பது இதயம் சுருங்குவதையும் 80 என்பது இதயம் விரிவடைவதையும் குறிக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தின் அளவு 140/90 mmHg ஆகும்.

என் சுயபுராணம் உங்களுக்கு வியப் பளிக்கிறதா? இவைகளை விரித்துரைக்கக் காரணம், நான் கடமையை - பணியை தடையின்றிச் செய்து, உயிர் வாழ, எனக்கு இழைக்கும் தீமைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதற்காகவேதான்.

நீங்கள் அளவுக்கு மீறி கொழுப்புப் பொருள் களை உண்கிறீர்கள். தேவைக்கதிகமான கொழுப்பு, கரோனரி இரத்தக் குழாய்களில் படிந்து, தடையை ஏற்படுத்துகிறது. அதனால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. அத்தகைய இரத்த அடைப்புகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 45 விழுக்காடு ஆவர்.

2 பாக்கெட் சிகரெட்டை புகைப்பதால் 80-120 மில்லி கிராம் நிக்கோடின் உள்ளிழுக் கப்பட்டு, இரத்தக் குழாய்களின் கழுத்தை நெருக்குகிறது.

மாரடைப்பு நோய்க்குக் (Heart Attack) காரணங்கள் பலப்பல. அவற்றுள் சில:

1. புகை பிடித்தல், 2.மது குடித்தல், 3.அதிக உடல் எடை, 4.கொழுப்பின் அளவு கூடுதல், 5.தைராக்சின் சுரப்பு அதிகமாதல், 6.கொழுப்பும் எண்ணெய்களும் கலந்த உணவுகள், 7.சர்க்கரை நோய், 8.மன அழுத்தம், 9.அதிகமாக உணவு உட்கொள்ளுதல், 10.கொழுப்பு அதிகமுள்ள பால், பாலாடை, மாமிசம், முட்டை. மேற்கண்டவைகளைத் தவிர்த்தால் என் இயக்கம் தடைபடாது; நீங்களும் நலம் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழலாம்.

உயிரைக் காக்க உணவில் கட்டுப்பாடு தேவை. தீமை பயக்கும் புகைத்தல், மது குடித்தல், போதைப் பொருட்களுக்கு அடிமை யாதல் போன்றவற்றை உடன் நிறுத்துங்கள். தீயவை உடல் நலத்தை மட்டும் கெடுக்காது. உங்களின் பண்பை, ஒப்புரவை, ஒழுக்கத்தை, மானுட நேயத்தையும் கெடுக்கும்.

 

 

http://periyarpinju.com/200808/page10.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails