Thursday, September 18, 2008

தீவிரவாதிகள் பிடித்த 300 குழந்தைகளை பொதுமக்கள் மீட்டனர்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள அரசு பள்ளியில், தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட 300 குழந்தைகளை, அப்பகுதி பொதுமக்கள் போராடி மீட்டுள்ளனர்.

அம்மாகாணத்தின் திர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் அதிரடியாக நுழைந்த 3 தீவிரவாதிகள் அங்கிருந்த 300 பள்ளி சிறுவர்களை சிறைப் பிடித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கடத்தப்பட்ட குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.


மக்களுக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், ஒருவன் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் எந்தவித காயமும் இன்றி மீட்கப்பட்டு விட்டதாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails