வழிபாட்டுத் தலத்தை அவமதிக்க 15 லட்சம்?:3 மாணவர்கள் கைது | | வழிபாட்டுத்தலத்தில் அவதிப்பு செய்ய ரூ.15 லட்சம் பணம் பெற்றதாக காங்கிரஸ் பிரமுகர் மகன் உள்பட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து முதல்வர் எடியூரப்பா திங்கள்கிழமை கூறியதாவது: ஷிமோகா நகரிலுள்ள சாகரில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தல சுவரில் செருப்பு மாலையை சனிக்கிழமை காலை சிலர் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து போலீஸ?992;் விசாரணை நடத்தி ராஜு, ராகவேந்திரா, சுதர்சன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பிபிஎம் படிப்பு படித்து வரும் பட்டதாரி மாணவர்கள். கைது செய்யப்பட்ட சுதர்சன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷிமோகா நகராட்சி முன்னாள் கவுன்சிலர் லலிதம்மாவின் மகன் ஆவார். மேலும் இந்தச் சம்பவத்தில் தற்போதைய கவுன்சிலர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்தச் இழிசெயலில் ஈடுபட ரூ.15 லட்சம் பணம் கைமாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பணத்தை ரவி என்பவர் கொடுத்தாக விசாரணையின்போது 3 பேரும் தெரிவித்துள்ளனர். அந்த ரவி யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதமாற்றம்: 5 பேர் கைது: குடகு மாவட்டம், சித்தாபுரம் அருகே நெல்லியஹுடிகெரே கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டது. இதில் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.
இதுபற்றி விசாரித்தபோது தேவாலயத்தின் பொறுப்பாளராக இருப்பவர் சுனில் ஜார்ஜ் என்று தெரியவந்தது. இவர் அக்கிராமத்தினர் சிலரை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த கிராமமக்கள் திரண்டுவந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து மதமாற்றம் செய்ததாக சுனில் ஜார்ஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆட்சேபகரமான துண்டுப் பிரசுரங்கள், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
| |
No comments:
Post a Comment