Thursday, September 18, 2008

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: ஐ.நா. கண்டனம்!

ஏமன் தலைநகர் சனாவில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பயங்கரவாத நடவடிக்கைகள் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவற்றை குற்ற நடவடிக்கையாகவே கருத முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தூதரகத்தின் மீதும், அதில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் பன்னாட்டு விதிகளின் படி ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது நேற்று நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல் அந்நாட்டு பாதுகாப்புப் படையை சேர்ந்த ஆறு வீரர்கள், கேரளாவைச் சேர்ந்த ராணி கிருஷ்ணன் நாயர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails