|
|
சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் செல் போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, எஸ்.எம்.எஸ். படிக்கக் கூடாது என்று அர்னால்டு உத்தரவிட்டு இருக்கிறார். ஆலிவுட் திரை உலகில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக இருந்து இப்போது அமெரிக் காவின் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருப் பவர் அர்னால்டு சுவாஸ் நேகர். கார், மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் ஒட்டியும், சாகசங்கள் செய் தும் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் இந்த முன்னாள் நடிகர் இப்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். கலிபோர்னியா மாகாணத்தில் கார் ஒட்டும் டிரைவர்கள் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ். செய்திகளை படிக்கவும் கூடாது என்று அந்த உத்தர வில் கூறியிருக்கிறார். முதல் தடவையாக இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதமும் 2-வது தடவை இந்த குற்றத்தை செய்கிறவர்களுக்கு ரூ.2500-ம் அபராதமாக விதிக்கப் படும். கார் ஓட்டும்போது செல்போனில் பேசவும் கூடாது. கவனம் முழுவதும் ரோட்டின் மீது தான் இருக்க வேண்டும். டிரைவர்கள் கவனத்தை சிதற விடுவதால் தான் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன என்கிறார் அர்னால்டு. அமெரிக்காவில் சமீபத் தில் நடந்த ஒரு ரெயில் விபத்தில் 25 பேர் பலியா னார்கள். என்ஜின் டிரைவர் எஸ்.எம்.எஸ். அனுப்புவதி லேயே கவனமாக இருந்தால் தான் 2 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது என்று விசாரணை அறிக்கை கூறு கிறது. |
No comments:
Post a Comment