|
ஐ.சி.எல். கிரிக்கெட்டில் டாக்கா வாரியர்ஸ் என்ற புதிய அணி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த அணியில் சேர்ந்த 13 வங்கதேச வீரர்களுக்கும் 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இந்த 13 வீரர்களும் வங்கதேசம் தொடர்பான எந்த உள் நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியாது. மேலும் வங்கதேச மைதானங்களிலும் இவர்கள் நுழைய அனுமதி கிடையாது, அங்கிருக்கும் எந்த ஒரு கிரிக்கெட் சார்ந்த வசதிகளையும் இவர்கள் பயன்படுத்த முடியாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதே தடை உத்தரவு கிரிக்கெட் விளையாடாத பணியாளர்களுக்கும் பொருந்தும், ஐ.சி.சி. அல்லது வங்கதேச கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்காத எந்த வித அமைப்பில் இவர்கள் சேர்ந்து பணியாற்றினாலும் தடை செய்யப்படுவார்கள் என்று வங்கதேச வாரியம் எச்சரித்துள்ளது. முன்னாள் கேப்டன் ஹபிபுல் பஷார் தலைமையில் 13 வீரர்கள் தடை செய்யப்பட்ட ஐ.சி.எல். கிரிக்கெட்டில் சேர்ந்தனர். இதில் பெரும்பான்மையான வீரர்கள் தற்போதைய வங்கதேச கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிரிந்து போன வீரர்களை மீண்டும் சேர்க்க பணம் தருவதாகக் கூட கூறிப்பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பணத்திற்காக ஐ.சி.எல். செல்லவில்லை என்று பஷாருடன் சென்ற அனைத்து வீரர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் |
No comments:
Post a Comment