|
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர்.ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்ததால் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. ஆனால் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சோயிப் அக்தர் தனக்கு விதிக்கப்பட்ட ரூ. 41 லட்சம் அபராத தொகையை இதுவரை செலுத்தவில்லை. அபராத தொகையை செலுத்தாததால் அக்தரின் தடை நீடிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்தார். அபராத தொகையை செலுத்தாத வரை அவர் உள்ளூரில் 4-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் போட்டியில் ஆட அனுமதிக்கப்படமாட்டாது. பாகிஸ்தானில் முதல் முறையாக நடைபெறும் 20 ஓவர் உள்ளூர் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் எந்த அணியிலும் அக்தர் பெயர் இடம் பெறவில்லை. |
No comments:
Post a Comment