உலகை பயமுறுத்திய அணுவெடிப்பு சோதனை திடீர் தள்ளிவைப்பு;தொழில்நுட்ப கருவிகளில் கோளாறு | | பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 300அடி ஆழத்தில் 27 கி.மீ. நீள சுரங்கத்தில் அணு வெடிப்பு(பிக் பேங்)சோதனை நடத்தும் முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர். புரோட்டான் அணுக் களை ராட்சத குழாய்களில் செலுத்தி அவற்றை ஒன் றோடு ஒன்று மோதச் செய்து பெரிய அளவில் அணு வெடிப்பை ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டனர். குழாய்களில் புரோட்டான் அணுக்களை செலுத்தும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த சோதனையால் உலகம் அழியும் என்ற பர பரப்பும் பீதியும் எழுந்தன.ஆனால் இதனால் எந்த பாதிப்பும் வராது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
புரோட்டான் அணுக்களை மோத விடும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஆய்வுக்கூடத்துக்குள் சில கருவிகளில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அணுவெடிப்பு சோதனை மேலும் 2மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. | | |
No comments:
Post a Comment