இஸ்ரேலின் புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் ஜிப்பி லிவ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண்மணி ஆவார்.இஸ்ரேல் பிரதமராக இருந்த இஹூத் ஓல்மார்ட் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை நியமிப்பதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சித் தலைவர்களுடன் அதிபர் ஷிமோன் பெரிஸ் தீவிர ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் அதிக ஆதரவை கொண்ட ஜிப்பி லிவ்னியை ஆட்சி அமைக்க வருமாறு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். அதிபரின் அழைப்பை ஏற்று தாம் பிரதமராக பதவியேற்க போவதாகவும், அனைத்து கட்சிகளும் தமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் லிவ்னி கேட்டு கொண்டுள்ளார். |
Friday, September 26, 2008
இஸ்ரேல் பிரதமராக லிவ்னி தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment