அய்யப்பன் கதை
மிரட்டலும் புராணப் புரட்டும்!
- ஆய்வாளன்
கேரளத்து மேனன்களுக்கு பண்டித நேருவிடம் செல்வாக்கு உண்டு. அவர்களிடமிருந்த கடமையு-ணர்வும் அறிவார்ந்த சிந்தனைகளுமே அதற்குக் காரணம். வி.கே.மேனன் என்ற கிருஷ்ண மேனன், கே.பி.எஸ்.-மேனன் என சுருக்கி அழைக்கப்-பட்ட சங்குண்ணி மேனன் போன்-றோர் அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள்.
வெளிநாட்டு உறவு இலாகா-வில் சாதாரண எழுத்தராகச் சேர்ந்த கே.பி.எஸ்மேனன், ருஷ்ய நாட்டுத் தூதுவராக பதவி உயர்ந்தார். எதையும் ஒளிவு மறைவின்றித் துணிவுடன் சிந்தித்துச் செயல்பட்டதாலேயே, முன்னேற்றம் அவரைத் தேடி வந்தது.
இவர் ஆங்கிலத்திலே பல நூற்கள் படைத்தவர். அதில் ஒன்றே டிநே றடிசடன (ஒரே உலகம்) என்ற புத்தகம் அதற்கு நியாய-மாகக் கிடைக்க வேண்டிய புகழும் பாராட்டும் கிடைக்காது போனதற்கு அறிவுலகம் வருந்த வேண்டும்.
அதிலே கேரளாவில் தாய்மை என்பது உண்மை; தந்தையர் நிலை என்பது நிச்சயமற்றது என எழுதி கேரள மக்களின் மனக் க-சப்-புக்கு ஆளானதால், பல சிறப்பான தகவல்கள் அடங்கிய அப்புத்தகம் பலத்த சர்ச்சைக்கு ஆட்பட்டு, மறைக்கப்பட்டது.
அதிலே ஒன்றுதான் சுவாமி அய்யப்பனின் தோற்றுவாய். மலையாள நாடான சேர நாடு, ஒட்டியிருந்த பாண்டிய நாட்டால் பலவகையில் பாதிக்கப்பட்டதைப் பன்மொழிப்-புலவர் கா.அப்பாத்-துரையார் தான் எழுதிய தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில் தெளிவாக விவரித்துள்ளார். மதுரையை ஆண்ட நாயக்க வம்ச ராணி மங்கம்மா, திருவிதாங்கூர் பாளையத்தாரிடம் கப்பம் வசூலித்து ஆண்டதாக சரித்திரச் சான்று உண்டு. ஒருமுறை வரிகட்ட திருவிதாங்கூர் தவறியதால், ராணி மங்கம்மா படை-யெடுத்துப் போய் கப்பம் வசூலித்தாக சரித்திரத் தடயம் உள்ளது.
பின்னால் நிகழ்ந்த அரசியல் விபத்துகளால், சேர நாடு தளை அறுத்தது. ஆனாலும் பாண்டிய நாட்டில் பஞ்சம், வறுமை தலைவிரிக்க, அப்பகுதி மக்களான கள்ளர், மறவர், அகம்படியர், வெள்ளாளர் தங்கள் பிழைப்புக்காக சேர நாட்டு எல்லையோரப் பகுதியில் புகுந்து ஆடு, மாடு, பெண்கள் மற்றும் செல்வங்களைச் சூறையாடுவதை வழக்கமாகக் கொண்டனர்.
ஏவுகணைத் திட்டத் தலைவராகும் முதல் பெண் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டங்களுக்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பு இதுவரை வழங்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு முதல் முறையாக அக்னி 2ஏ ஏவுகணைத் திட்டத்தின் தலைவராக 45 வயதான டெசி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். |
கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாக் கேரளத்தார் ஒரு சூழ்ச்சி திட்டம் வகுத்ததாக கே.பி.எஸ்.மேனன் எழுதுகிறார். பாண்டிய நாட்டை நோக்கியிருந்த தங்கள் மலையின் உச்சியில் கோரமான முகமும் கையில் கொடுவாளும் தாங்கிய அய்யனாரப்பனைச் சிலையாக வடித்து இந்த எல்லையைத் தாண்டிவரும் எதிரிக்குக் கண் குருடாகி விடும். கைகால் முடங்கிவிடும் எனக் கதைகட்டி, மாந்திரீப் புகழ் கேரளத்தார் புனைந்துரைத்தனர். இன்றைய அய்யப்பன், அன்றைய அய்யனாரப்பனே என்று எழுதுகிறார் கே.பி.எஸ். இந்த மூடப் பயமுறுத்தலால், தமிழகப் பகுதியிலிருந்து, ஊடுறுவல் சற்றே குறைந்ததாம்.
ஒரு காலத்தில் தமிழனை மிரட்டவே படைக்கப்பட்ட அய்யப்பனை, இன்று கோடி கோடியாய் கொட்டிக் குளிப்பாட்டும் தமிழர்கள் நிலைகுறித்து அழுவதா? சிரிப்பதா?
No comments:
Post a Comment