| |
நான் ஒரு காமெடி நடிகன். பஃபூன் மக்களை சிரிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறேன். என்னை ஏன் சீண்டுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன். விஜயகாந்த்- வடிவேலு மோதல் : விஜயகாந்த்தை எதிர்த்து புது கட்சி வடிவேலு அறிவிப்பு - சென்னை செப் 25 : விஜயகாந்த்தை எதிர்த்து கண்டிப்பாக போட்டியிடுவேன். இது சத்தியம். இதற்காக கட்சி தொடங்கவும் நான் தயார். பஃபூனான என்னுடன் விஜயகாந்த் மோதுவது வியப்பாக இருக்கிறது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். வடிவேலு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : திமுக என்னை பகடைக் காயாக பயன்படுத்துகிறது என்றும், ஆளும் கட்சியினர் தூண்டுதலில் நான் செயல்படுவதாகவும் விஜயகாந்த் சொல்லி இருப்பது குழந்தைதனமான குற்றச்சாட்டு. இந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது. விஜயகாந்த் ஆட்கள் என் வீட்டை தாக்கியபோது, "முதல்வர் ஆகும் எங்கள் தலைவரை எதிர்க்க கூடாது. மீறினால் வீட்டை தீ வைத்து கொளுத்துவோம். குண்டு வைத்து தகர்ப்போம்" என்றதை இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லோரும் கேட்டார்கள். விஜயகாந்துக்கு வீரம் இருந்தால் அதை அரசியல் கட்சிகளிடம் காட்டட்டும். என்னைப் போன்ற சாதாரணமானவர்களிடம் ஏன் காட்ட வேண்டும்? எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விரோதம் கிடையாது. ஏற்கனவே விஜயகாந்த் தூண்டுதலால் என் ஆபீசை தாக்கியவர்கள் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி எனக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார்கள். மொட்டைக் கடிதங்களும் வந்தன. இப்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். காமெடி நடிகன் நான் ஒரு காமெடி நடிகன். பஃபூன், மக்களை சிரிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறேன். என்னை ஏன் சீண்டுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன். அவரை எதிர்த்து எல்லா கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். விஜயகாந்த்தை எதிர்க்கத் தேவைப்பட்டால் புது கட்சி துவங்கவும் கூட நான் தயார். எல்லா கட்சிகளிடமும் எனக்கு ஆதரவு கேட்பேன். நான் எல்லா கட்சி தலைவர்களுக்கும் பொதுவானாவன். நான் ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கும் அறிமுகமானவன். இன்னும் சொன்னால் தமிழகத்தில் உள்ள எல்லா குடும்பத்தினருக்கும் வேண்டப்பட்டவன். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளர் கிடையாது. என்னை யாரும் பயன்படுத்தவும் இல்லை பயன்படுத்தவும் முடியாது" என்றார் வடிவேலு. வடிவேலுவின் இந்தப் பேட்டி, விஜயகாந்த்- வடிவேலு மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகவே தோன்றுகிறது. |
No comments:
Post a Comment