Tuesday, September 23, 2008

அணுகுண்டு தயாரிக்க ஈரான் அதிக ஆர்வம்:இஸ்ரேல் குற்றச்சாட்டு

lankasri.comஅணுகுண்டு தயாரிப்பதற்கு ஈரான் அதிக ஆர்வம் காட்டிவருவதாக இஸ்ரேல் இன்று குற்றம்சாட்டியது.அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிக்கக் கூடாது என பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடி அளிக்கப்பட்டுவருகிறது. எனினும் அந்நாடு இதற்கு மதிப்பளிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை பயனற்றதாக இருந்து வருகிறது.

ஈரான் இவ்வாறு நடந்து கொள்வது மேற்கத்திய நாடுகளிடம் கருத்துவேறுபாட்டை அதிகரித்துள்ளது என்று இஸ்ரேல் உளவுத் துறையின் தலைவர் யோஸி பைடாஸ் தெரிவித்தார்.

அணுகுண்டுகளை தயாரிக்கும் நோக்குடன் யுரேனியத்தை செறிவூட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஈரான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

உலகில் நமது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வலிமை யாருக்கும் இல்லை என்று ஈரான் கருதுகிறது. இதனால் அணுகுண்டு தயாரிப்பு என்ற இலக்கை நோக்கி அந்நாடு முனைப்புடன் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1222097215&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails