Saturday, September 13, 2008

அமெரிக்காவில் ரயில்கள் நேருக்குநேர் மோதல்: 15 பேர் பலி

lankasri.comஅமெரிக்காவில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகர் அருகே வெள்ளிக்கிழமை இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் பலியாயினர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வென்டுரா கவுன்டி நகருக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், சாட்ஸ்வொர்த் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில், காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221324077&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails