அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 2 தீமோத்தேயு 2:22(bible) செம்பியத்தில் மயக்க மருந்து கொடுத்து கால் சென்டர் பெண் கடத்தி கற்பழிப்பு:2 வாலிபர்கள் கைது-திருமணம் செய்ய மதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம் |
செம்பியம் பந்தர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் புனிதா (24) (பெயர் மாற்றபட்டுள்ளது) இவர் வேளச்சேரியில் உள்ள கால் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று வீட்டில் புனிதா மட்டும் தனியாக இருந்தார்.அவரதுபெற்றோர் கோவிலுக்கு சென்று இருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த புனிதாவை காணவில்லை.அவர் அங்கு சென்றார்.என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை நேரத்தோடு கால் சென்டர் பணிக்கு புறப்பட்டு சென்றிருப்பார் என்று பெற்றோர் நினைத்தனர். புனிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மறுநாள் புனிதா உடலில் பல இடங்களில் காயங்களோடு,வீட்டுக்கு திரும்பி வந்தார்.அரைமயக்கத்தில் காணப்பட்ட புனிதாவை அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயக்கம் தெளிந்த புனிதா தன்னை 2 பேர் மயக்க மருந்து கொடுத்து மடிப்பாக்கத்துக்கு கடத்தி சென்று கற்பழித்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் செம்பியம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் சம்பவம் நடந்தது மடிப்பாக்கம் எல்லை அதனால் அங்கு புகார் செய்யுங்கள் என்றனர். மடிப்பாக்கம் போலீசாரோ பெண்ணை கடத்தியது செம்பியம் எல்லை எனவே அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பி அனுப்பினர். போலீசாரின் அலை கழிப்பால் புனிதாவின் பெற்றோர் வெறுத்து போனார்கள். நடந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீஸ் கமிஷனர் சேகரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.அந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.துணை போலீஸ் கமிஷனர் பன்னீர்செல்வம், மேற்பார்வையில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ அதிரடியாக விசாரித்தார். சம்பவத்தன்று புனிதா வீட்டில் தனியாக இருந்த போது அவருடன் கால் சென்டரில் வேலை பார்த்து தற்போது வேலையை விட்டு நின்று விட்ட நண்பர்கள் இந்தியாஸ்(25),சுரேஷ்(25),ஆகிய 2பேரும் அங்கு வந்துள் ளனர். புனிதாவிடம் பேசி கொண்டிருந்தனர். அப்போது புனிதா தனக்கு பிறந்தநாள் என கூறினார்.பார்ட்டி தருவதாக 2பேரும் புனிதாவை பிரபல ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்.அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர்.இதில் புனிதா மயங்கினார். புனிதாவை கைதாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றி மடிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு இந்தியாஸ், கூட்டி சென்றான். இதற்கு சுரேஷ்உடந்தையாக இருந்துள்ளான். அங்கு வைத்து மயக்கம் தெளியும் நிலைக்கு வந்த புனிதாவுக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டான். இந்தியாஸ் மதுபோதையில் இருந்தார். சைக்கோபோல் புனிதாவிடம் மிக கொடூரமாக நடந்துள்ளான். இதனால் புனிதாவின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்த புனிதா என்ன நடந்தது என்று கேட்டதற்கு ஒன்றுமே தெரியாதவன்போல் காரில் ஏற்றி புனிதாவை வீட்டில் விட்டு தப்பி சென்று விட்டான் என்பது தெரிய வந்தது. புனிதாவை கற்பழித்ததாக நேற்று நள்ளிரவு இந்தியாசையும் உடந்தையாக இருந்ததாக சுரேசையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 3 வருட காதலை நட்பு என ஏமாற்றினார்:திருமணம் செய்ய மதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம் கால் சென்டர் பெண் புனிதாவை கற்பழித்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர் இந்தியாஸ் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:- புனிதாவும்,நானும்,வேளச்சேரியில் உள்ள சுதர் லேண்ட் கால் சென்டரில் ஒன்றாக வேலை பார்த்தோம்.அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் அளவுக்கு நெருங்கி பழகினோம்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு புனிதா என்னுடன் டேட்டிங் வந்துள்ளார். அப்போதெல்லாம் பலமுறை நாங்கள் உல்லாசமாக இருந்திருக்கிறோம். பிரபல ஓட்டல்களில் டிஸ்கோத்தே பார்ட்டி என புனிதாவை கூட்டி சென்று சுகவாசியாக வாழ்ந்தேன்.அவ்வப்போது எனக்காக புனிதா நிறைய பரிசுகளும் வாங்கித் தந்தாள்.அவளை உயிருக்கு உயிராக காதலித்தேன். 3 வருடம் ஜாலியாக போன எங்களது உல்லாச வாழ்க்கையை நிரந்தரமாக்க எண்ணினேன். புனிதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணினேன். எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் நான் உன்னிடம் நட்பாகத்தான் பழகினேன். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அதற்கு வேறு ஆளைபார் என முகத்தில் அடித்தால் போல் கூறி விட்டார். நானும் விடாமல் எனது நண்பர்கள் மூலம் எப்படியாவது சமாதானம் செய்து புனிதாவை திருமணம் செய்து விடலாம் என தூது விட்டேன். திருமணத்திற்கு புனிதா ஒரு நிபந்தனை விதித்தாள். நான் ஆங்கிலோ இந்தியன்,கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவள் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்றாள் எனது பெற்றோர் உன்னை எங்களது மதத்திற்கு மாற சொல்கிறார்கள். சம்மதம் என்றாள் தாலி கட்டி கொள்ள ரெடி,இல்லை என்றால் முடியாது என்றாள். நானோ முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், கிடையாது என நினைப்பவன் ஆனால் மதத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கிறாளே என வேதனை அடைந்தேன். இதற்கிடையே புனிதா என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். வேறு நபர்களுடன் சுற்றினார். இதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தேன். புனிதாவை கற்பமாக்கினால் அவள் உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றனர். அதன்படி அவளது பிறந்த நாளான 12-ந்தேதி அவளது வீட்டிற்கு நண்பர் சுரேசுடன் சென்றேன். பிறந்த நாள் பார்ட்டி தருவதாக கூறி புனிதாவை வேளச்சேரிக்கு கூட்டிச் சென்றோம். அங்கு நானும் புனிதாவும் மது அருந்தி உற்சாகமாயிருந்தோம். இறுதியில் புனிதா தள்ளாடிய நிலைக்கு வந்தார். அப்போது நண்பர்கள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அதன்படி மடிப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு புனிதாவை சுரேஷ் உதவியோடு தூக்கி சென்றேன். அங்கு புனிதாவுடன் உல்லாசமாக இருந்தேன். மற்றபடி அவரை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றெல்லாம் கற்பழிக்கவில்லை. இப்போதும் புனிதாவை திருமணம் செய்து கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். என அப்பாவியாக போலீசில் கூறி உள்ளார். போலீசார் இந்த வழக்கில் சமாதானம் செய்து வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் புனிதாவின் பெற்றோர் சம்மதிக்காததால் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். |
No comments:
Post a Comment