தற்போது உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரமாக திகழும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளுக்கு திரும்புவார் என்று மான்செஸ்டர் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சீசனில் 42 கோல்களை அடித்து சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, வில்லா ரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் காயமடைந்தார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீகின் நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் யுனைடட், சமீபத்தில் நடந்த இங்கிலாந்து லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியிடம் தோல்வி தழுவியது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடைந்த தோல்விகளின் நினைவை அழிக்க கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வருகைக்காக மான்செஸ்டர் யுனைடட் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. |
No comments:
Post a Comment