3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை | | ஹூஜி அமைப்பை சேர்ந்த முக்கிய கமாண்டர் உட்பட 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் சிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 11வது ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையினர் அங்கு சென்று பயங்கரவாதிகள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் ஹூஜி பயங்கரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் இரண்டு பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், 3வது நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. | |
No comments:
Post a Comment