பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உயரதிகாரிகளின் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள மாரத்தஹல்லி என்ற இடத்தில் நோக்கியா நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இதில் சோனி என்ற பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு சோனி தனது பெற்றோர், நண்பர் மற்றும் போலீசாருக்கு தனித்தனியே3 கடிதங்களை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை முழுவதும் சோனியை தொடர்பு கொள்வதற்காக மைசூரில் உள்ள அவரது பெற்றோர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள இயலாததால் வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பிறகு சனிக்கிழமை காலையில் தான் சோனி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. கடந்த சில தினங்களாகவே தனது மேலதிகாரிகள் தம்மை துன்புறுத்தி வந்ததாக சோனி கூறியதாகவும், இதுகுறித்து அவர்களிடம் தாம் பேசியதாகவும் சோனியின் தந்தை ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் நிறுவனத்தின் மேலதிகாரிகள் எந்தவித காரணமுமின்றி தம்மை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர் வெங்கட்டிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். தமது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெங்கட் உயர் கல்வி பெற வசதியாக தனது பணம் அனைத்தையும் வெங்கட்டிடம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தற்கொலை குறித்து திலக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர் |
Sunday, September 28, 2008
பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment