கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புலிகள் தாக்கியதில் 3 அதிரடிப்படை வீரர் காயம்
|
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் சனியன்று புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் அதிரடிப்படைவீரர் மூவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படைவீரரை இலக்கு வைத்து ஊடுருவிய புலிகள் சிறப்பு அணியொன்று இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அடிக்கடி தாக்குதல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment