உத்தரகண்டில் கிறிஸ்தவ போதகர்,கன்னியாஸ்திரீ கொலை |
|
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் கிறிஸ்தவ மத போதகரும், கன்னியாஸ்தீரீயும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.மீரட் நகரைச் சேர்ந்த போதகர் சாமுவேலும் (60), தில்லியைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ மெர்ஸியும் (35) டேராடூனில் உள்ள தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து கிறிஸ்தவ மதப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் தனித்தனி அறைகளில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை காவலாளி கண்டுபிடித்து போலீஸருக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். |
No comments:
Post a Comment