கிளிநொச்சி சுற்றி வளைப்பு | |
| |
| |
| |
கொழும்பு இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி இருக்கும் கிளிநொச்சி நகரைச் சுற்றி வளைத்துவிட்டது என்று இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடபகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவம் புலிகளின் பகுதியில் முன்னேறி வருவதுடன், அவர்கள் கைவசம் இருந்த பல பகுதிகளை மீட்டு வருகிறது. இந்நிலையில், பிரபாகரன் தங்கியிருக்கும் கிளிநொச்சி பகுதியை ராணுவம் சுற்றி வளைத்து விட்டதாக, லெப்டினன் ஜெனரல் சரத்பொன் சேகா கூறியிருக்கிறார். கொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை ராணுவம் கிளிநொச்சி நகருக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது முகாமிட்டுள்ளது என்றும், சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மீது அடுத்த வாரம் தாக்குதல் துவங்கும் என்றும் கூறினார். அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான சண்டையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்தார். இதனிடையே வடக்கு பகுதியில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த புதிய மோதலில் 37 புலிகள் உயிரிழந்தனர். ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். நேற்று நடந்த விமானப் படை தாக்குதலில் கிளிநொச்சிக்கு வடக்குப் பகுதியில் உள்ள அக்கராயன் குளம் என்னுமிடத்தில் உள்ள புலிகளின் முகாம் சேதமடைந்ததாகவும், ஏராளமான புலிகள் காயம் அடைந்திருக்கக்கூடும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவம் தங்கியுள்ள பகுதியில் இருந்து பார்க்கும் போது, நகரில் உள்ள சில கட்டடங்களைக் காண முடிகிறது என்று அவர் தெரிவித்தார். ராணுவம் சுற்றி வளைத்துள்ளதை அடுத்து, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது கூண்டில் அடைபட்ட விலங்கு போல இருக்கிறார் என்றும், விரைவில் புலிகளின் பிடியிலிருந்து கிளிநொச்சியை விடுவிப்போம் என்றும் அந்த ராணுவ அதிகாரி தெரிவித்தார். |
No comments:
Post a Comment