`பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி மாதிரி' என்று சொல்வார்கள். கர்ப்ப காலத்தில் தாய்க்கும், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஏராளமான சக்தி தேவைப்படுவதால், சத்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிடுவார்கள். கர்ப்ப கால உணவு முறையால், தாயின் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதனால் குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான பெண்கள், உடல் எடை குறைப்பிற்காக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. `உடற்பயிற்சி எல்லாம் வேண்டாம், குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தாலே போதும்', பெண்கள் எடை குறைந்து மெலிதாக மாறி விடுவார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். தாய்ப்பால் மூலம் தாயின் உடலிலுள்ள பெரும்பாலான சக்தி வெளியேறுவதே இதற்கு காரணம். முதல் 14 வாரங்களுக்கு குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் கணிசமான அளவு எடையை இழக்கிறார்கள். தாய்ப்பால் அதிகம் அளிக்காத பெண்களுக்கு இந்த எடை இழப்பு ஏற்படுவது இல்லை. எனவே எடை இழக்க, பெண்கள் தாய்ப்பால் அளிப்பது நல்லது. தொகுப்பு:- திருமதி.சங்கீதா வழக்கறிஞர்
|
No comments:
Post a Comment