| | ஒரிசா மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட காந்தமால் மாவட்டத்தில் சகஜநிலை திரும்பிக் கொண்டு இருப்பதாக அம்மாநில அரசு கூறிவருகிறது.அம்மாநிலத்தில் இன்னும் தீவைப்பு சமப்வங்களும்,கடத்தல் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.இதை ஒரு போலீஸ் அதிகாரியே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரிசா மாநிலத்தில் வி.எச்.பி. தலைவர் லஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டதையடுத்து அம்மாநிலத்தில் கலவரம் வெடித்தது. தேவாலயங்கள் தீ கரையாக்கப்பட்டன, பல வீடுகள் கொளுத்தப்பட்டன. கலவரத்திற்கு பயந்து பலர் ஊரை விட்டே ஒட்டம் பிடித்தார்கள். இந்த கலவரம் ஞிண்ட நாள் ஞிடித்து, தற்பொதுதான் ஒய்ந்துள்ளது என்று மக்கள் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். ஒரிசா அரசும சகஜநிலை திரும்புவதாக கூறி வந்தது. ஆனால் அரசின் கருத்துக்கு மாறாக இன்னுமும் அங்கு தீவைப்பு சம்பவங்களும்,கடத்தல் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றது. இது குறித்து காந்தமால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் கூறுகையில், கொச்சபாலா போலீஸ் பகுதியில் 10 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளது என்று ஒப்புக் கொண்டார். சம்பவம் நடந்த பகுதி ஒரு காட்டுப்பகுதி. அதனால் அதை உடனே ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் கத்தின்ஜியா கிராமத்தில் நோய்வாய்பட்டுள்ள தன் தந்தையை சந்திக்க சென்ற ஒருவரை காணவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. நிவாரண முகாமில் இருந்த பெண்மணி ருனிமாதிகால் போலீஸாரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தன் தந்தையை பார்க்க சென்ற தன் கணவரை காணவில்லை என்று அவர் கூறியுள்ளார். மதமாற்றம் செய்து கொள்ளுங்கள் அப்படி செய்யாவிட்டால் கிராமத்திற்கு வரக்கூடாது என்று சில விஷமிகள் தன் கணவரை மிரட்டினார்கள். எனவே அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் தனது புகார் மனுவில் ருனிமா கூறியுள்ளார். ஆக ஒரிசா மாநிலத்தில் இன்னும் அமைதி ஏற்படவில்லை. தீவைப்பும், கடத்தலும் அங்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. | |
No comments:
Post a Comment