தாய்லாந்து ஓபன் டென்னிஸ்
லியாண்டர் பெயஸ் ஜோடி `சாம்பியன்'
பாங்காங், செப்.29-
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி பாங்காங்கில் நடந்தது. நேற்று நடந்த இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-லுகாஸ் (செக் குடியரசு) ஜோடி, அமெரிக்காவின் ஸ்காட்-டேவிட் மார்டின் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியை பெற 76 நிமிடம் தேவைப்பட்டது. லியாண்டர் பெயஸ் வென்ற 40-வது இரட்டையர் பட்டம் இதுவாகும். 2005-ம் ஆண்டில் லியாண்டர் இந்த பட்டத்தை ஆஸ்திரேலிய வீரர் பால் ஹான்லேவுடன் இணைந்து வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரட் டோங்கா 7-6, 6-4 என்ற நேர் செட்டில் செர்பியாவின் முன்னணி வீரர் நோவாக் டோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=441580&disdate=9/29/2008
No comments:
Post a Comment