|
|
அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனமான லேமென் பிரதர்ஸ் வங்கி திவாலா அறிவிப்பை வெளியிட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இச்சம்பவம் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. லேமென் பிரதர்ஸ் வங்கியை போல மேலும் சில அமெரிக்க வங்கிகளும் நிதி நெருக்கடிக்கு உள்ளாயின. இதை சரிக்கட்ட அமெரிக்க அரசு ரூ. 3லட்சத்து 40ஆயிரம் கோடியை அவரமாக ஒதுக்கியது. என்றாலும் கூட அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி தீரவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் புஷ் தலைமையில் அவசரக்கூட்டம் ஒன்று நடந்ததது. இக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன், ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா ஆகியோரும் இதர முக்கிய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஜார்ஜ் புஷ் அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதும் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். பொருளாதார சீர்குலைவை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் |
No comments:
Post a Comment