Sunday, September 28, 2008

கோர்ட்டுக்கு பர்தாவில் வந்த ஷகீலாவுக்கு தமுமுக கண்டனம்

நெல்லை: ஆபாச படம் திரையிட்டது தொடர்பான வழக்கில் ஆஜராக நெல்லை நீதிமன்றத்துக்கு வந்த நடிகை ஷகீலா பர்தா அணிந்திருந்தார். இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் முகமது ரபீக் இதுகுறித்துக் கூறுகையில், முஸ்லிம் பெண்களின் கண்ணியமான ஆடையான பர்தாவை ஆபாச படத்தில் நடித்தது தொடர்பான வழக்கில் ஆஜராக நெல்லை நீதிமன்றத்திற்கு வந்த நடிகை ஷகீலா அணிந்து வந்ததன் மூலம் விலை மாதர்களின் பாதுகாப்பு உடைபோல அதை காட்டியுள்ளார்.

இதை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது. காசுக்காக லட்சக்கணக்கான மக்கள் முன் முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இவர் நீதிமன்றத்திற்கு வரும்போது மட்டும் பர்தாவை அணிந்து வந்து முஸ்லிம்களின் கோபத்தை தூண்டியுள்ளார்.

அடுத்த முறை நீதிமன்றத்திற்கு ஷகீலா பர்தா அணிந்து வந்தால் தமுமுக மகளிர் அணியினரை திரட்டி செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்துவோம். இதற்காக சட்ட ரீதியாக எந்த பிரச்சனை வந்தாலும் இஸ்லாத்திற்காக இதை எதிர்கொள்ள நாங்கள் தயார் என்றார்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails