ஸ்டாக்ஹோம், ஜுன்.4-
வங்காளதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் ஐரோப்பா சென்றார். கொல்கத்தாவில் தங்கி இருந்தபோது அவருக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் போராட்டம் நடத்தியதாலும், மருத்துவ உதவி பெறுவதற்காகவும் அவர் ஐரோப்பா சென்றார். இப்போது அவர் சுவீடன் நாட்டில் தஞ்சம் புகுந்து இருக்கிறார். தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள உப்பசாலா என்ற இடத்தில் அவர் தங்கிக்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கி இருக்கிறார். அவருக்கு நிதி உதவியும் அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு தங்கி 2 ஆண்டுகள் வேலை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=416711&disdate=6/4/2008
No comments:
Post a Comment