Wednesday, June 4, 2008
சாத்தான் சக்தியால் முகமது பாதுகாக்கப்பட்டாரா?
சரியான் வழியில் செல்லாமல் வழி தவறிச் செல்பவர்களுக்கு மட்டுமே சாத்தானால் தீங்கு விளைவிக்க முடியும் என்று குரான் சொல்கிறது. அல்லாவை சேவிப்பவர்களைக் குறித்த காரியத்தில் சாத்தானுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் கிடையாது.
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம் பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின் 'ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்) என்று மலக்குகளிடம் கூறினோம் இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள் அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. 'நான் உனக்குக் கட்டளையிட்ட போது நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது? என்று அல்லாஹ் கேட்டான் 'நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 'இதிலிருந்து நீ இறங்கி விடு நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்' என்று அல்லாஹ் கூறினான். '(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (அதற்கு அல்லாஹ்) 'நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய் என்று கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன் என்று கூறினான்.'பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும் அவர்கள் பின்னும் அவர்கள் வலப்பக்கத்திலும் அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன் ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய் (என்றும் கூறினான்). அதற்கு இறைவன் 'நீ நிந்திக்கப்பட்டவனாகவும் வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன் என்று கூறினான்.(ஸூரா7:11- 18 )
வேறொரு இடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளாது:
'இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன? என்று (இறைவன்) கேட்டான். அதற்கு இப்லீஸ் 'ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை! என்று கூறினான். 'அவ்வாறாயின் நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய். 'மேலும் நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக! என்று (இறைவனும்) கூறினான். 'என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான். 'நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய் 'குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில் என்று அல்லாஹ் கூறினான். (அதற்கு இப்லீஸ்) 'என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால் நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். 'அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர என்று கூறினான். (அதற்கு இறைவன் 'அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். 'நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர என்று கூறினான். நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
(ஸூரா.15:32- 44 )
வாசிப்பதற்கு மிகவும் சுவராசியமாக இருக்கிறதல்லவா! பாருங்கள்.அல்லா சாத்தானின் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பது மட்டுமல்ல அவனின் திட்டங்களையும் பின்பற்றுகிறான். மனிதர்களை அழிவுக்குள்ளாக்கும் நோக்கத்துடன் சாத்தான் அல்லாவிடம் கால அவகாசம்(தாமதம்) கேட்கிறான். அல்லா அவனுடையவேண்டுகோளுக்கு செவிகொடுக்கிறான். ஒன்று அல்லா சாத்தானின் அழிவுக்கேதுவான அந்த திட்டத்தை அறிந்திருந்து மனிதர்களை வழிவிலகட்டும் என்று விட்டிருக்கவேண்டும் அல்லது அல்லா அதைக் குறித்து அறியாமல் அறியாமையால் அதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.
(மேற்கண்ட இரு குரான் பகுதிகளிலும் பெரும் முரண்பாடுகள் இருப்பதைக் கவனியுங்கள். அல்லவும் இப்லீஸும் பயன்படுத்திய அதே வார்த்தைகளை குரானின் ஆசிரியர் பயன்படுத்தவில்லை என்பது போல தோன்றுகிறது)
ஆனால் அல்லாவை பின்பற்றுபவர்கள் எல்லாரும் முக்கியமாக எல்லா தீர்க்கதரிசிகளும் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அல்லா சொவதினால், இவையெல்லாம் முக்கியமான காரியங்களால்ல. பாதுகாப்பைக் குறித்த வாக்கு குரானில் பலமுறை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது:
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான். (ஸூரா:5:105 )
மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்). (ஸூரா.16:98- 100 )
'தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். 'தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.'(ஸூரா.72:27,28 )
சாத்தானிடமிருந்து தன்னை பின்பற்றுபவர்களை காப்பாற்றுவதோடு சேர்த்து, முகமது மனிதர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவார் என்றும் உறுதிகூறப்பட்டிருக்கிறது.
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்¢ (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்¢ அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்¢ நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (ஸூரா.5:67 )
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்களின் நோக்கம் வாசிப்பவர்களூகுஎளிதில் புரியும் விதத்தில் இருக்கவேண்டும். முகமது அல்லாவுக்கு பிரியமானவராகவும் அவருடைய பாதுகாப்பின் கீழக இருப்பவராகவும் இருந்தால், அவரால் சாத்தானின் ஆளுகையின் கீழ் வரமுடியாது, சாத்தானின் தந்திர முயற்சிகளால் அவர் தீங்கிழைக்கப்படவும் முடியாது. மேலும் இப்படிப் பட்ட ஒரு பாதுகாப்பு இருக்கிற படியால் முகமதுவை ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ அல்லது வேற்று மதத்தானோ முகமதுவை ஒன்றும் செய்ய முடியாது.
எனினும் மேலே கூறப்பட்டிருப்பவற்றிற்கு முரணாக இருப்பது என்னவெனில் முகமது பேசிய சாத்தானின் வசனங்கள் என்று அறியப்பட்டிருக்கிறவையே. முஸ்லீம் குறிப்புகளின்படி,அல்லாவிடமிருந்து வராதவிகளான மூன்று பெண் கடவுள்கள் அல்லது அல்லது அல்லாவின் மகள்களை போற்றூம் வசனங்களை எழுதும்படி சாத்தான் முகமதுவை நடத்தினான். இது குறித்து அதிகப்படியான தகவல்களைப் பெற கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லின்க்குகளில் சென்று பாருங்கள்:
http://answering-islam.org/Hahn/satanicverses.htm
http://answering-islam.org/Responses/Saifullah/sverses.htm
http://answering-islam.org/Gilchrist/Vol1/3c.html
http://answering-islam.org/Responses/Saifullah/sverses_eh.htm
http://answering-islam.org/Shamoun/satanic_verses.htm
சாத்தானிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கூறின முகமதுவை காப்பாற்றுவதற்Kஆகவும், அபாயம் விளைவிக்கும் அந்த நிகழ்விலிருந்து அவரை தப்புவிக்கவும் குரான் கீழ்கண்ட வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது:
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்(ஸூஆ.22:52) .
இந்தப் பகுதி முகமதுவின் (அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளின் ) செய்தியில் சாத்தான் குறுக்கிட்டு பாதித்தான் என்று தெளிவாக ஒப்புக்கொள்கிறது. அந்த முரண்களை அல்லா தீர்த்துவைக்காமலவற்றை ஒழித்துவிடுகிறார் என்பது வாதமாக இருக்கிறது.
மேலும் முகமது அவர்கள் மந்திரவாதத்தின் தாக்கத்தில் இருந்ததாக என்று ஹதீஸ்கள் கூறுகிறது. குரானின் கூற்றுப்படி அது சாத்தானின் கைவேலையாகவே இருக்க வேண்டும்:
Narrated Aisha:
Magic was worked on Allah's Apostle so that he used to think that he had sexual relations with his wives while he actually had not (Sufyan said: That is the hardest kind of magic as it has such an effect). Then one day he said, "O 'Aisha do you know that Allah has instructed me concerning the matter I asked Him about? Two men came to me and one of them sat near my head and the other sat near my feet. The one near my head asked the other, 'What is wrong with this man?' The latter replied he is under the effect of magic. The first one asked, 'Who has worked magic on him?' The other replied, 'Labid bin Al-A'sam, a man from Bani Zuraiq who was an ally of the Jews and was a hypocrite.' The first one asked, 'What material did he use?' The other replied, 'A comb and the hair stuck to it.' The first one asked, 'Where (is that)?' The other replied, 'In a skin of pollen of a male date palm tree kept under a stone in the well of Dharwan.'" So the Prophet went to that well and took out those things and said, "That was the well which was shown to me (in a dream). Its water looked like the infusion of Henna leaves and its date-palm trees looked like the heads of devils." The Prophet added, "Then that thing was taken out." I said (to the Prophet) "Why do you not treat yourself with Nashra?" He said, "Allah has cured me; I dislike to let evil spread among my people." (Sahih al-Bukhari, Volume 7, Book 71, Number 660: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/071.sbt.html#007.071.660)
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்¢ ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்¢ ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்¢ அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்¢ இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை¢ அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது¢ தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?(ஸூரா.2:102) .
முகமதுவின் மந்திரவாதம் குறித்து அதிக தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தில் சென்று பாருங்கள்:
http://answering-islam.org/Responses/Menj/bewitched1.htm
http://answering-islam.org/Responses/Menj/bewitchment.htm
இதுவரை நாம் கண்டவை இரு முடிவுகளில் நம்மை கொண்டுவந்து விடுகிறது:
1. ஒன்று முகமது அல்லாவுக்கு பிரியமானவராக இல்லாமல் அவரைப் பின்பற்றாதவராக இருந்து, சாத்தான் தன்னை ஆளுகை செய்ய அனுமத்தித்து அவன் இஷ்டப்படி இருந்திருக்கவேண்டும்.
2.அல்லது அல்லா தாம் சொன்னபடி முகமதுவை காப்பாற்ற தவறீயிருக்கவேண்டும். அப்படியானால் அல்லா நம்பத்தக்கவரல்ல, தாம் சொன்னதை செய்ய இயலாதவர் ஆவார்.
English Source : http://answer-islam.org/MoProtection.html
Translated source : http://isaforall.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment