கொலை மற்றும் களவு குற்றச்சாட்டுகளை அடுத்து நேற்று முன்தினம் புதன்கிழமை சவூதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட இரு இலங்கையர் மற்றும் ஒரு இந்தியர் ஆகியோர் போலீஸ் காவலில் இருந்தபோது, போலீசின் கட்டாயத்தின்பேரிலேயே தாம் குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. சவூதியின் மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு மன்னிப்புச் சபை தனது பலத்த கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இலங்கைப் பெண்ணான ஹலீமா நிஸா காதர் ஒரு குழந்தையின் தாயார். இவரது கணவர் முஹமட் நௌஷாத் பார்மில், இவர் ஒரு இந்தியர், மற்றும் இலங்கையரான பண்டாரநாயக்கா ஆகியோரே 2005 நவம்பரில் கொலை, கொள்ளை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு ஜூன் 2007 இல் மரண தண்டனை தீர்ப்பாக அளிக்கப்பட்டது. மேற்படி மூவரும் தடுப்புக் காவலில் இருந்தபோதும் சரி அவர்களது விசாரணைகள் நடந்தபோதும் சரி அவர்களுக்கென சட்டத்தரணிகள் எவருமே நியமிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment