செல்போன் ரிங்டோன்களுக்கு தீவிரவாதிகள் சோமாலியாவில் தடை
நைரோபி, நவ. 4-
சோமாலியா நாட்டில் அல்ஷபாப் என்ற அமைப்பை சேர்ந்த தீவிவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் சோமாலியாவில் உள்ள கிஷ்மாயூ என்ற துறைமுக பகுதியையும் தெற்கு பகுதி யையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அவர்கள் தங்கள் அதிகாரத்தை செலுத்த தொடங்கி விட்டனர். மோகாடிசுவை தலைநகராக அறிவித்துள்ளனர். தங்களுக்கு என்று தனி சட்ட திட்டங்கள் அடங்கிய கோர்ட்டுகள், தனி கொடி என்று அமைத்துள்ளனர்.
தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் சினிமா, நடன நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுகளை தடை செய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் செல்போன்களில் பயன்படுத்தி வந்த ரிங் டோன்களுக்கு தடை விதித்துள்ளனர்.
அந்நாட்டு மக்கள் இந்திப்பட பாடல்கள் மற்றும் தாங்கள் பின் பற்றும் மத பாடல்களை செல்போன்களில் ரிங்டோன் களாக பயன்படுத்தி வந்தனர். அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்த முடிய வில்லை.
தீவிரவாதிகளின் தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. அலி முகமது யூசுப் (20) என்ற வாலிபர் தனது செல்போன் மூலம் இசை மற்றும் வீடியோ மூலம் படங்களை பார்த்து ரசித்தார்.
இதை அறிந்த தீவிரவாதிகள் அவரை நடுரோட்டில் நிறுத்தி வைத்து சவுக்கால் அடித்து தண்டனையை நிறைவேற்றினர். தங்கள் மதத்துக்கு எதிரான கொள்கைகளை குறிப்பாக இசை மற்றும் செக்ஸ் வீடியோ காட்சிகளை அனுமதிக்க முடியாது என அல் ஷபாப் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷேக் ஹாசன்யாகூப் தெரிவித்துள்ளார்
source:maalaimalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment