தனது கிரீன்காட் விசாவை புதுப்பிக்கவும், மற்றும் சில சுய அலுவல்கள் காரணமாகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த முன்னாள் இலங்கையின் இராணுவத் தலைமை அதிகாரியான சரத் பொன்சேகாவினை அமெரிக்க அரசு, மனித உரிமைமீறல் தொடர்பாகவும், இலங்கை அரசின் யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் பல விசாரணைகள்…….
மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்ககப்பட்ட நிலையில் அவர்மீது அத்தகைய ஓர் விசாரணையை நடத்தப்படுமாயின் அமெரிக்காவின்மது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அமெரிக்காவை எச்சரிக்கை செய்துள்ளார்.
அதே போல் இலங்கையின் பௌத்த குருமார்களின் கூட்டமைப்பும், இலங்கையின் அமைச்சர்களின் மேல்மட்டக் குழுவினரும் அதே எச்சரிக்கையை அமெரிக்காவிற்குக் கூட்டாக விடுத்துள்ளனர்.
இவர்களின் இந்த எச்சரிக்கைக்கு அடிபணிந்து அமெரிக்கா சரத் பொன்சேகாவிடமான தனது விசாரணையை தொடராமல் விட்டாலும், இல்லை அந்த விசாரணையை தொடர்நதாலும், அதன் போது சரத் பொன்சேகா எந்த உண்மையைச் சொன்னாலும், இல்லை சொல்லாமல் அவர் இலங்கை அரசைக் காப்பாற்ற முனைவதன் மூலம் தானும் யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், வேறு பல இன்னோரன்ன குற்றங்களுக்காகவும் அவர் தனது கிரீன்காட் விசாவை இழக்க நேரிடுவதுடன், யுத்தக் குற்றவாளியாக நீரூபிக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
அல்லது கிரீன்காட் பறிக்கப்பட்ட நிலையில் அவர் தனது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படலாம். இல்லையென்றால் அவர் தனது உண்மையான கண்ணால் கண்ட சாட்சிகள் அனைத்தையும் ஒப்புக்கொண்டு யுத்தக்குற்றத்தினின்றும் தன்னை விடுவித்துக்கொண்டு அமெரிக்காவிலேயே தங்கிவிடலாம்.
ஆனால் இவர் என்ன செய்தாலும் தாயகம் திரும்பும் பட்சத்தில் இவருக்கான தீரபபு அங்கே திருத்தி எழுதப்பட்டு தயார் நிலையில் உள்ளதை அவர் மிகவும் கவனத்திலெடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையில் உள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.
ஈழத்தமிழினத்தின் அழிப்பு நடவடிக்கையின்போது பல சாட்சியங்கள் வீடியோப் பிரதிகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை யாவும் இலங்கை அரசின் மீது அதிருப்தியடைந்த இராணுவத்தினராலும், மற்றும் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பையும், யுத்தத்தினையும் ஏற்றுக்கொள்ளாத சிங்கள புத்திஜீவிகளாலும் வெளிக்கொணரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இதனை எப்படியோ மோப்பம் பிடித்து ஒருசிலவற்றைக் கண்டுபிடித்து விடும் இலங்கையின் புலனாய்வுத்துறையினர், அந்த சாட்சியங்களுக்கு உரியவர்களை ஏதோ ஒரு வகையில் (என்கவுண்டர் முறையிலாவது) அவர்களை கொலைசெய்து வருவது இன்று நாள்தோறும் பத்திரிகைச் செய்திகளாக நாம் படித்து வருவது தெரிந்ததே.
அதற்கு அவர்கள் இடும் பெயர் அந்த சாட்சியத்திற்கு உரியவர்கள் சிங்களப் புலிகள் அல்லது புலி முகவர்கள் அல்லது புலிகளிடம் பணம்பெற்றுக்கெண்டு அவர்களுக்கு உதவியவர்கள் என்பதாகும்.
இந்த வகையில் தாயகம் திரும்பும் சரத் பொன்சேகாவிற்கும் ஏதாவது ஒரு நவீனமுறை அங்கே காத்திருக்கின்றது. அந்த முறை இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு கைவராவிட்டால் இருக்கவே இருக்கின்றன அண்டைநாடுகளின் புலனாய்வுத் துறைகள்.
அவர்கள் இந்த விடயத்தில் கைவந்த கில்லாடிகள். தங்கள் சொந்த நாட்டு அரச தலைவர்களையும், அவர்களின் உறவுகளையும் போட்டுத் தள்ளிவிட்டு மாற்றான் தலையில் பழியைப் போட்டுத் தப்பிக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் யாருமில்லை.
எனவே சரத் பொன்சேகாவின் தலைவிதியையும் ஒரு குறித்த தொகைக்கு பேரம் பேசிக் கொடுத்த விடுவார்கள். எப்படியோ தாயகம் திரும்பும் சரத்தின் தலை எத்தனை லகரங்களோ, கோடிகளோ மேலே உள்ளவனுக்குத்தான் வெளிச்சம்.
அதுமட்டுமல்லாது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவின் முன்னே பூதாகாரமாக நிற்பவர்கள் இருவர். ஒருவர் சரத் என். சில்வா (முன்னாள் பிரதம நீதியரசர்), மற்றவர் சரத் பொன்சேகா என்பது மட்டும் யாவரும் அறிந்த உண்மை.
எப்படியோ இந்த இரண்டு சரத்தும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னாதாக மகிந்தரின் அரசியல் பாதையில் இருந்து நீக்கப்படவேண்டியவை என அடிக்கோடிடப்பட்டுவிட்டது.
அது எப்போது? எங்கே? எப்படி? யார் மேல் பழியைப் போடுவது? என்பதுதான் கேள்விக்குறி?
- சங்கிலியன்
source:tamilspy
--www.thamilislam.co.cc
No comments:
Post a Comment