இது மிஷின் யுகம். இயந்திர மனிதனான ரோபோக்களின் பணி அதிகரித்து வருகிறது. ரோபோக்களுக்கு
| |||||||||||
தேவையான ஆற்றல் பேட்டரிகள், செல்கள் மூலமோ அல்லது மின்சாரமாகவோ வழங்கப்படுகிறது. இதற்கு மாற்று வழியாக சில முறைகளை கடைபிடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அவற்றில் குறிப்பிடத்தக்கது மனிதனைப்போல உணவின் மூலம் ஆற்றலைப் பெறுவது. இதை அடிப்படையாக வைத்து சைவ, அசைவ ரோபோக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவை தமக்கு தேவையான ஆற்றலை தாவரங்களை உண்பதன் மூலமும், பூச்சிகளை உண்பதன் மூலமும் பெற்றுக் கொள்கின்றன.
இவற்றில் தாவரங்களை உண்ணும் ரோபோவுக்கு பற்களால் ஆன சக்கரம் பொருந்திய பகுதி உள்ளது. இது வாய் போல செயல்பட்டு தாவரங்களை அரைக்க உதவுகிறது. பேட்டரியின் திறன் குறையும் தகவல் அறிந்தவுடன் ரோபோவின் கரங்கள் தானாகவே உணவை (தாவரத்தை) தேட ஆரம்பித்துவிடும். கிடைக்கும் தாவரம் பற்சக்கரத்தில் நசுக்கப்பட்டு சாறு பிழியப்படுகிறது. இந்த சாறில் இருந்து கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு ரோபோக்கள் இயங்குகின்றன. சுமார் 150 பவுண்டு தாவரத்தை உண்டால் 100 மைல் தூரத்தை கடப்பதற்கான ஆற்றல் ரோபோவுக்கு கிடைக்கிறது. இந்த ரோபோ ஈட்ஆர் ( ணிகிஜிஸி ) எனப்படுகிறது. இது அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது அசைவ ரோபோவான எகோபாட் 2. இதற்கான உணவான புழு, பூச்சிகளை நாம்தான் எடுத்து வைக்க வேண்டும். 8 பூச்சிகளை உணவாக உட்கொண்டால் 7 அடி தூரம் நகரும் இந்த ரோபோ. இதுவரை இந்த ரோபோக்கள் மனிதர்களை சாப்பிடவில்லை என்பது நமக்கு ஆறுதலான விஷயம்.
source:dailythanthi
--
www.thamilislam.co.cc




No comments:
Post a Comment