சாலை விபத்துக்கு யார் காரணம் காரின் கருப்பு பெட்டி
லண்டன்: விமானத்தில் இருப்பது போன்ற Ôகருப்பு பெட்டிÕயை காருக்கும் தயாரித்து ஐரோப்பிய யூனியன் சாதனை படைத்துள்ளது. விமான விபத்துகளில் காரணத்தை அறிய கருப்புப் பெட்டி உதவுகிறது. விமானத்தில் பொருத்தப்படும் அதில் கடைசி நிமிட உரையாடல், சத்தம், வானிலை அனைத்தும் பதிவாகி இருக்கும். அதை வைத்து விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கலாம். அதுபோன்ற கருவியை கார்களுக்கென தயாரிக்க ஐரோப்பிய யூனியன் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதற்கு ரூ.18.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 3 ஆண்டு முயற்சிக்குப் பிறகு இப்போது அது சாத்தியமாகி உள்ளது. விமானத்தைப் போல கார்களுக்கென Ôகருப்புப் பெட்டிÕ வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் காரின் வேகம், சமீபத்திய இயக்கம், ஓட்டுநர் பிரேக் போட்ட விதம், கொடுத்த சமிக்ஞைகள் உட்பட 20 வகையான புள்ளிவிவரங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும். இந்த தகவல்களை விபத்துகளின்போது போலீசார், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீதிமன்ற வழக்குகளிலும் இது பயன்படும். இந்தக் கருப்பு பெட்டி குறித்து நடந்த ஆய்வில், இது பொருத்தப்பட்ட கார்களின் ஓட்டுநர்களால் விபத்துகள் 10 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. காரின் பழுதுபார்ப்பு செலவும் 25 சதவீதம் குறைந்தது. இதுபற்றி ஆய்வுக் குழு இயக்குனர் ரால்ப் காட்டா கூறுகையில், ÔÔரூ.39,000 மதிப்புள்ள இந்த கருவி, சீட்டுக் கட்டு அளவில் இருக்கும். காரின் டேஷ் போர்டு அல்லது தரைப் பகுதியில் பொருத்தலாம்ÕÕ என்றார். சென்சாருடன் இணைந்த இந்தக் கருவி, காரின் இயக்கத்தை துல்லியமாகப் பதிவு செய்யும். இது கார்களில் கட்டாயமாக்கப்பட்டதும், சாலை பாதுகாப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். கருப்புப் பெட்டியை இனி தயாராகும் கார்களில் பொருத்த ஐரோப்பிய நாடுகளை யூனியன் வலியுறுத்தியுள்ளது என்றும் ரால்ப் தெரிவித்தார்
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment