Sunday, November 1, 2009
இலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: சிங்கள ராணுவ தளபதியிடம் அமெரிக்கா விசாரணை
இலங்கை போரில் மனித உரிமை மீறல்கள்: சிங்கள ராணுவ தளபதியிடம் அமெரிக்கா விசாரணை ராஜபக்சேவின் சகோதரருக்கு எதிராக போர்க் குற்ற ஆதாரம் கேட்கிறது கொழும்பு, நவ.2- இலங்கை போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிங்கள ராணுவ தளபதி பொன்சேகாவிடம் 4-ந் தேதி அமெரிக்கா விசாரணை நடத்துகிறது. ராஜபக்சேவின் சகோதரருக்கு எதிராக அவரிடம் தகவல்களைக் கேட்கிறது. 170 குற்றச்சாட்டுகள் இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வாரம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்தது. 68 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், கடந்த மே 2-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக 170 குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்சே மீது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, போர்க் குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த விசாரணை தொடர்பாக, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வருமாறு இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். பொன்சேகா தலைமையில்தான் இறுதிக்கட்ட போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ராணுவ தளபதிக்கு அழைப்பு ராணுவ தளபதி பொன்சேகா, அமெரிக்காவின் `கிரீன் கார்டு' வைத்திருப்பவர். அதைப் புதுப்பிப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஒக்லகோமா என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் தங்கி உள்ளார். அங்கு இருந்த பொன்சேகாவை டெலிபோன் மூலமாக தொடர்பு கொண்டு அமெரிக்க அதிகாரிகள் பேசினர். அப்போது, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். இத்தகவலை இலங்கை அரசிடம் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார். வக்கீல் யோசனை மேலும், அமெரிக்க வெள்ளை மாளிகையின் வக்கீலாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரெட் பீல்டிங்கின் சட்ட உதவியை பொன்சேகா நாடியுள்ளார். விசாரணையில் ஆஜராகி அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாக பதில் அளிக்குமாறு பொன்சேகாவுக்கு பிரெட் பீல்டிங் யோசனை தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், பொன்சேகாவுக்கு உதவியாக, ஒரு சட்ட நிறுவனத்தின் வக்கீல்களை இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வக்கீல்களை பயன்படுத்திக் கொள்ள பொன்சேகாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒக்லகோமாவில் 4-ந் தேதி பொன்சேகா, அமெரிக்க அதிகாரிகள் முன்பு சாட்சியம் அளிப்பார் என்று இலங்கையில் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு கருத்து அமெரிக்காவின் இந்த கிடுக்கிப்பிடியால் இலங்கை அரசு அச்சம் அடைந்திருப்பதாக இலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுபற்றி இலங்கை அரசுத் தரப்பில் கேட்டபோது, இவ்விவகாரம் பற்றி உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் பதில் அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment